India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லையைச் சேர்ந்த சிதம்பரம் என்பவர் விதிகளை மீறி செயல்படும் தனியார் திருமண மஹாலின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இன்று (ஜூன் 12) அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், புகார் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
கோவை எம்எல்ஏ வானதி சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வாரிசு அரசியல் என்றால் என்ன என்பதை ராகுல் காந்தி புரிந்து கொள்ள வேண்டும். அரசியலில் இருக்கும் ஒருவரது மகனோ, மகளோ, குடும்பத்தினரோ அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்ல முடியாது,சொல்லவும் கூடாது. வாக்களிக்கும் தகுதி கொண்ட இந்திய குடிமகன் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் தேர்தலில் போட்டியிடலாம் எந்தப் பதவிக்கும் வரலாம் என்றார்.
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து மனுக்களாக பெற்றுக் கொண்டார். மேலும் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா இன்று விசிக கட்சி தலைவரும், எம்பியுமான திருமாவளவனை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதனைத் தொடர்ந்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய நிலையில் சிறிது நேரம் கலந்துரையாடினார். அப்போது விசிக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.
சென்னை விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர், விமான நிலையத்தில் குண்டுவெடிக்கும் என கூறி இணைப்பை துண்டித்துள்ளார். இதனையடுத்து, மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உணவுப்பொருள் தொடர்பான பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் வருகின்ற ஜூன்.15 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பெரியகுளம், நல்லகருப்பன்பட்டி, தேனி, கொடுவிலார்பட்டி, ஆண்டிபட்டி, ஜம்புலிபுத்தூர், ஸ்ரீரங்கபுரம், உத்தமபாளையம், லோயர் கேம்ப், போடி அம்மாபட்டி, சுந்தர்ராஜபுரம் ஆகிய பகுதியில் நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் சொத்துக்களுக்கான சந்தை மதிப்பு வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்காக வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. சொத்துக்களுக்கான சந்தை மதிப்பு வழிகாட்டி தொடர்பாக ஆட்சேபனை இருந்தால் 15 நாட்களுக்குள் மதிப்பீட்டு துணைக்குழுவிடம் தபால் மூலம் தெரிவிக்கலாம் என ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை தோறும் நடைபெற்று வந்த குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேர்தல் விதிமுறைகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று(ஜூன் 12) குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 35 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க எஸ் பி உத்தரவிட்டார்.
தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு போலீசார் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் நேற்று(ஜூன் 11) மாவட்ட முழுவதும் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 12 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 170 மது பாட்டில்களையும் ரூபாய் 7420 பறிமுதல் செய்தனர்.
தமிழக அரசு, துணிநூல் துறை மூலம் 10, 12ஆம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலமாக ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேற்படி பயிற்சி பெற விரும்புபவர்கள் https://tntextiles.tn.gov.in./jobs/ என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.