India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மேடை தளவாய் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி மையத்தில் நடப்பு ஆண்டிற்கான கூட்டுறவு மேலாண்மை பட்டய முழுநேர பயிற்சி வகுப்புக்கு மாணவர்கள் சேர்க்கை வருகிற ஜூலை 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கல்வித் தகுதி பிளஸ் 2 தேர்ச்சியாகும். விருப்பம் உள்ளவர்கள் tncu.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என திருநெல்வேலி மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் அறிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் உத்தரவின்பேரில் நேற்று (ஜூலை 12) வேலூர் மாவட்டம் தந்தை பெரியார் தொழில்நுட்பக் கல்லூரி மாணவ,மாணவியருக்கு, பெருகிவரும் இணையவழி குற்றங்கள் குறித்தும், அவற்றிலிருந்து கவனமுடன் இருக்க போதுமான வழிமுறைகள் குறித்தும், குறிப்பாக ஆன்லைன் விளையாட்டுகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் பலர் பங்கேற்று பயனடைந்தனர்.
தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஈரோடு பாஜக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று கலந்து கொண்டார். இந்நிகழ்வின்போது மூலனூர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
திருவாடானை: தேளூரை சேர்ந்தவர் அழகம்மாள். இவரது இட பிரச்சனை தொடர்பாக திருவாடானை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இவரது வக்கீல் வழக்கை சரியாக நடத்தாததால். நேற்று நீதிமன்றத்தில் அவரது வழக்கு ஆவணங்களை கேட்டு மனு செய்துள்ளார். அப்போது வந்த வக்கீல் அழகம்மாவை அசிங்கமாக பேசி கன்னத்தில் அறைந்துள்ளார். புகாரின்பேரில் திருவாடானை போலீசார் வக்கீல் சுவாமிநாதன் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
ஒசூரில், உணவு பாதுகாப்புத் துறை, போலீசார் இணைந்து கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை, போதைப்பாக்குகள் விற்கப்படுகிறதா என ஆய்வு நடத்தினா். உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் லால்வேனா, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு ஆகியோா் உத்தரவின்படி ஓசூா் டிஎஸ்பி பாபு பிரசாந்த் தலைமையில் ஓசூா் பகுதியில் ஆய்வு செய்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்ற 40 கடைகளுக்கு சீல் நேற்று வைக்கப்பட்டது.
சென்னையில் பள்ளி சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. ஏழை சிறுமிகளிடம் பணத்தாசை காட்டி, அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, பெண் உட்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதில் நதியா, ராமச்சந்திரன், தண்டபாணி, மாய ஒலி ஆகியோரை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரிய வெங்காயம் 1 கிலோ ₹30 ரூபாய் முதல் ₹35 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று₹10 முதல் ₹11 ரூபாய் வரை விலை உயர்ந்து, உழவர் சந்தையில் ₹46 ரூபாய் எனவும், வெளி மார்க்கெட்டில் ₹50 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், அரசு பள்ளியில் அஞ்சலக வங்கிக் கணக்கு தொடங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பழனிச்சாமி, பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அஞ்சல் சேமிப்பு கணக்கு புத்தகமும், இந்திய அஞ்சல் பட்டுவாடா, வங்கியின் சேமிப்பு கணக்கு அட்டையும் வழங்கப்பட்டது.
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு மல்லிகைப்பூக்கள் வரத்து குறைவு மற்றும் கோவில் திருவிழாக்கள் மற்றும் சுபமுகூர்த்தம் என்பதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. தற்போது மல்லிகை பூ கிலோ ரூ.600 முதல் ரூ.800 வரையிலும், பிச்சிப்பூ கிலோ ரூ.500-க்கும், முல்லை கிலோ ரூ.300 முதல் ரூ.500- க்கும், கனகாம்பரம் கிலோ ரூ.500 முதல் ரூ.600-க்கும், தாமரைப்பூ ஒன்று ரூ.5க்கும் விற்பனையாகிறது.
புதுவை அரசின் தீயணைப்புத்துறையில் 9 வண்டிகள் 15 ஆண்டுகளை கடந்தவை ஆகும். 15 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை மீண்டும் பயன்படுத்தக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே ரூ.5 கோடி செலவில் புதியதாக 10 புதிய தீயணைப்பு வண்டிகளை வாங்க புதுவை அரசு திட்டமிட்டு அதன்படி புதியதாக வாங்கப்பட்டுள்ள 10 புதிய வண்டிகள் புதுவைக்கு வந்து அவை தற்போது கோரிமேடு தீயணைப்பு நிலைய வளாகத்தில் வைத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.