Tamilnadu

News March 16, 2024

ஆட்சியரகத்தில் பிரதிநிதிகள் உடன் ஆலோசனை கூட்டம்

image

பாராளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, இன்று மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் உடனான கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில், மாநகர காவல் ஆணையர் காமினி மற்றும் மாநகர காவல் துணை ஆணையர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News March 16, 2024

திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

image

இந்திய தேர்தல் ஆணையர் அவர்கள் நாடாளுமன்ற பொது தேர்தல் அறிவிப்பை வெளியிட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து திண்டுக்கலில் காமராஜர் பேருந்து நிலையத்தில் இன்று இரவு மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் கீழ் கட்சி சுவர் விளம்பரம், மற்றும் விளம்பர பதாகைகளை அகற்றும் பணியை ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டார்.

News March 16, 2024

ஓபிஎஸ் அணியினர் முக்கிய ஆலோசனை!

image

மதுரை எழுமலையில் இன்று (16.03.2024) ஓபிஎஸ் அணி சார்பில் பாரளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை மற்றும் வாக்குசாவடி குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சேடபட்டி ஒன்றிய கழகம் மற்றும் ஏழுமலை பேரூர் கழகம் சார்பாக நடைபெற்ற இக்கூட்டத்தில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் தலைமை வகித்தார். முக்கிய நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில் தேர்தல் குறித்த பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது

News March 16, 2024

துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு

image

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அது தொடர்பான அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். இதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து துப்பாக்கி உரிமதாரர்களும் தங்களிடம் உள்ள துப்பாக்கிகளை உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலோ அல்லது உரிமம் பெற்ற தனியார் ஆயுத முகவர்களிடமும் ஒப்படைக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

News March 16, 2024

மதுரையில் காத்திருக்கும் 26 லட்சம் பேர்!

image

10 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மதுரை நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 26 லட்சத்து 77 ஆயிரத்து 220 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக 13, 61,094 பெண் வாக்காளர்களும், 13,15,866 ஆண் வாக்காளர்களும், 260 மூன்றாம் பாலினித்தவர்கள் என 26,77,220 பேர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 16, 2024

தேர்தல் முடியும் வரை குறைதீர் கூட்டம் ரத்து

image

பாராளுமன்ற தேர்தல்-2024 தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. பொதுமக்கள் மனுக்களை வழங்கிட ஏதுவாக மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்று கூறினார்.

News March 16, 2024

சேலம் மாவட்டத்தில் இன்றைய வெப்பநிலை!

image

சேலம் மாவட்டத்தில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்தாண்டு ஏப்ரல் தொடங்கும் முன்பே வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சேலத்தில் இன்று அதிகபட்சமாக 101.5 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள், இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் வெளியே செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

News March 16, 2024

சிவகங்கை: தலைமை ஆசிரியர் தற்காலிக பணிநீக்கம்

image

எஸ்.காரைக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராகப் பணிபுரியும் பிரிட்டோ என்பவர் அப்பள்ளியில் பயிலும் 4 மாணவியர்களிடம் பாலியல் ரீதியான தொந்தரவு செய்தும், அம்மாணவிகளிடம் ஒழுக்க கேடான செயலில் ஈடுபட்டதை தொடர்ந்து இன்று தலைமை ஆசிரியர் அ.பிரிட்டோவை தற்காலிக பணிநீக்கம் செய்து ஆணையிட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 16, 2024

ராணிப்பேட்டையில் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தது

image

நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கடைப்பிடிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் வளர்மதி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் மற்றும் அதிகாரிகள் விஜயராகவன், ராஜேந்திரன் முரளி, வட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர்.

News March 16, 2024

திருவாரூர்: வீட்டுவசதி வாரிய குடியிருப்பு தரைமட்டம்

image

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி பகுதி பாலகிருஷ்ணா நகரில் அமைந்துள்ள சுமார் 40 ஆண்டுகள் பழமையான தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி கட்டிடங்களை அகற்றும் பணியினை மன்னார்குடி நகர்மன்ற தலைவர் த.சோழராஜன் இன்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மன்னார்குடி நகராட்சி பொறியாளர், கட்டிட மேற்பார்வையாளர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!