Tamilnadu

News March 17, 2024

சென்னையில் பறக்கும் படை அதிரடி சோதனை

image

தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை என 3 பாராளுமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை 3 மணிக்கு டெல்லியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனடியாக பம்பரமாக சுழன்று பணியாற்ற தொடங்கி விட்டனர். இதன் எதிரொலியாக இன்று சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

News March 17, 2024

மதுரையில் துவங்கியது சோதனை

image

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மதுரை மாவட்டம் முழுவதும் பறக்கும்படையினர் இன்று முதல் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 3 நாடாளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 20க்கு மேற்பட்ட பறக்கும்படை குழுவினர் அனைத்து வாகனங்களில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் குறித்து பலத்த சோதனை நடத்தி வருகின்றனர்.

News March 17, 2024

சென்னையில் 1.42 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

image

சென்னை யானைக்கவுனியில் தனியார் காம்ப்ளெக்ஸில் தங்கியிருந்த யாசர் அராபத், குணா ஜெயின் ஆகியோரிடம் இருந்து ₹1.42 கோடி ஹவாலா பணம் பறிமுதல். இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் நேற்று காலை தண்டையார் பேட்டை காவல்நிலையத்தில் போலிசார் விசாரணை மேற்கொண்டதில் மேலும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ள நபர் குறித்து கேட்டறிந்தனர்.

News March 17, 2024

புதுக்கோட்டை: எம்எல்ஏ அலுவலகங்களுக்கு சீல் 

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா கூறியிருப்பது, மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதனால் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு கோட்டாட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்றார். மேலும் புதுக்கோட்டையிலுள்ள எம்எல்ஏ அலுவலகத்தை தேர்தல் அலுவலர்கள் நேற்று பூட்டி சீல் வைத்தனர். அதைபோல் மாவட்டத்திலுள்ள அனைத்து எம்எல்ஏ அலுவலகங்களும் மூடப்பட்டன.

News March 17, 2024

கோழிகளை ஏற்றிச் சென்ற லாரி விபத்து

image

தாராபுரத்தில் இருந்து கோழிகள் மற்றும் வாத்துகளை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது காங்கேயம் பகுதியைச் சேர்ந்த ஞான பிரகாசம் என்பவர் மினி லாரியை ஓட்டிச் சென்றார். அப்போது எதிரே வந்த மற்றொரு லாரி மீது மோதி நேற்று விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காங்கேயம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் ஞானப்பிரகாசம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

News March 17, 2024

எல்லையில் தீவிரம்: கலெக்டர் அறிவிப்பு

image

நீலகிரி கலெக்டர் அருணா நேற்று (மார்ச்.16) கூறுகையில், தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்க மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப் பட்டு உள்ளது. மேலும், தேர்தல் குறித்த புகார்களை 1800-425-2782, கட்டுப்பாட்டு அறை எண்கள்: 0423-2957101, 2957102, 2957103, 2957104 ஆகிய எண்களை அனுகலாம் என தெரிவித்தார்.

News March 17, 2024

1966 வாக்குச்சாவடிகள் அமைப்பு – ஆட்சியர் 

image

விழுப்புரம் மாவட்டத்தில் 2024 நாடாளுமன்ற பொது தேர்தலுக்காக மொத்தம் 1966 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிக்காக 12095 அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடிகளில் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் மாவட்டத்தில் 113 பதற்றமான வாக்குச்சாவடிகள் இருப்பதாகவும், மொத்தம் 16,69,577 வாக்காளர்கள் உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.

News March 17, 2024

குறைதீர் கூட்டங்கள் ரத்து – ஆட்சியர்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 19 இல் நடைபெறுகிறது. இதனையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம்,மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம், மாதாந்திர மக்கள் தொடர்பு திட்ட முகாம், விவசாயிகள் குறைதீர் கூட்டம் போன்றவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது, என்றார்

News March 17, 2024

ஒலிபெருக்கி பயன்படுத்த தடை

image

புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு ஏப்ரல் 19ஆம் தேதி (ம) வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி அன்றும் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், தேர்தல் காலங்களில் ஒலிபெருக்கியின் பயன்பாடு அதிகமாக இருக்கும். எனவே புதுச்சேரி. காரைக்கால். மாகே. ஏணாம் போன்ற பகுதிகளில் இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை ஒலிப்பெருக்கி பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.

News March 17, 2024

வனப்பகுதியில் கருகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

image

குமுளி மலைச்சாலையில் கூடலூர் வனச்சரகத்துக்குட்பட்ட லோயர்கேம்ப் அமராவதி வனப்பகுதியில் துா்நாற்றம் வருவதாக குமுளி போலீசாருக்கு நேற்று (மார்.16) தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் கருகி, அழுகி கிடந்த நிலையில் இருந்த ஆண் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!