India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகமும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகமும் இணைந்து ஜூலை 2024 முதல் மார்ச் 2025 வரை 9 மாதத்திற்கு மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டை புதுப்பித்து வழங்கப்பட உள்ளது. ஜூன்.19,20,21 ஆகிய 3 தினங்களுக்கு ஆட்சியர் அலுவலக பின்புறம் இந்த சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
விழுப்புரம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என சீமான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இவர் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்டு 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
9 வருடங்களாக பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள மதுரை மாவட்டம் உத்தபுரம் முத்தாலம்மன் கோவிலை திறந்து வழிபாடு நடத்த உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவிட்டுள்ளது. வழிபாட்டுக்கு அனுமதிப்பது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை பதில் தர உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தென்காசி 2024 மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தோல்வி அடைந்தார். இந்நிலையில், புதிய தமிழகம் கட்சியின் சார்பில் தென்காசியில் நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், “இன்று இல்லாவிட்டால் நாளை நிச்சயம் ஒட்டுமொத்த மனங்களையும் வென்றெடுப்போம் என எழுதப்பட்டுள்ளது. இவர் இங்கு 7முறை போட்டியிட்டு தோல்வியை மட்டுமே சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி பகுதியில் நாளை (ஜூன்.15) பராமரிப்பு பணியில் நடைபெற உள்ளதால் 9 மணி முதல் 2 மணி வரை கள்ளக்குறிச்சி, ஏமப்போ், நீலமங்கலம், கருணாபுரம், எம்.ஆா்.என். நகா், சடையம்பட்டு, மட்டிகைக்குறிச்சி, நத்தமேடு, பொன்பரப்பட்டு , அ.அலம்பலம், புதுமோகூா், கச்சிராயபாளையம், நல்லூத்தூா், வன்னஞ்சூா், சிறுவங்கூா், ரோடு, மாமாந்தூா் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் காலி பணியிடங்களை நிரப்ப கோரியும், 10 ஆண்டுகள் பணி முடிந்த ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிடவும், ஊழியருக்கு குடும்ப பாதுகாப்பு ஊதியம் வழங்கிட வலியுறுத்தி திருவள்ளூர் அருகே பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் சிவலிங்கம், தினேஷ், சிவா, காந்திமதி, மாரிமுத்து உள்ளிட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
மேட்டூர் அணை ஜூன் 12-ல் திட்டமிட்டப்படி திறக்கப்படாததால், டெல்டா குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை தமிழ்நாடு அரசின் வேளாண்துறை அறிவித்துள்ளது. இதன்படி “78.67 கோடியில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். 1 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 2,000 மெட்ரிக் டன் நெல் விதைகள் மானிய முறையில் 3.85 கோடியில் தரப்படும்” என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை, வாலாஜா, பில்லியப்பா நகரைச் சேர்ந்தவர் ரகோத்தமன் (54). பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (54), ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இருவரும் நெருங்கிய நண்பர்கள். இந்நிலையில், நேற்றிரவு ராஜேந்திரனின் வீட்டில் இருவரும் மது அருந்திக் கொண்டிருந்தபோது திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ராஜேந்திரன் கட்டையால் தாக்கியதில் ரகோத்தமன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில், தாலுகாகளுக்கு தனித்தனி கிராமங்களில் முகாம் நடைபெறுகிறது. அதன்படி, பெரம்பலூர்- அருமடல், வேப்பந்தட்டை -பிம்பலூர் , குன்னம்-பெண்ணக்கோனம், ஆலத்தூர்-சில்லக்குடி என ஒதுக்கப்பட்டுள்ளது. முகாமில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் தொடர்பான கோரிக்கை வைக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாநில நெடுஞ்சாலைகளில் அனுமதியின்றி வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்படும் பட்சத்தில் வேகத்தடைகளை அமைத்த அமைப்பினர் தனிநபர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.