Tamilnadu

News March 17, 2024

ஈரோடு: தேர்தல் பறக்கும் படை வாகனங்கள் தொடக்கம்

image

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல்.19 இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இந்நிலையில், ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேர்தல் பறக்கும் படையினரின் வாகனத்தை ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான ராஜ கோபால் சுன்கரா தொடங்கி வைத்தார்.

News March 17, 2024

மரநிழலில் அமர்ந்து மனுக்கள் பெற்ற இராமநாதபுரம் கலெக்டர்

image

நேற்று இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் புதுப்பட்டிணம் ஊராட்சிக்கு வந்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் மக்களை சந்தித்து மனுக்களை பெற்றார். மரத்தடிநிழலில் தரையில் அமர்ந்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றும்
கனிவாக பேசியும் குறைகளை கேட்டறிந்த ஆட்சியரை இப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்

News March 17, 2024

புதுகை மக்களே இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க ஏற்கனவே 1950 டோல் ஃப்ரீ என் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் 18004252735 டோல் ஃப்ரீ எண்ணுக்கும் அதேபோல் லேண்ட்லைன் நம்பரான 04322-229860, 229870, 229880 என்ற எண்ணிற்கும் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.

News March 17, 2024

பயன்பாட்டிற்கு வந்தது குடிநீர் தொட்டி

image

தாம்பரம் மாநகராட்சி பெருங்களத்தூர் தெற்கு பகுதி நான்காவது மண்டலம் 57 ஆவது வார்டு சிவசக்தி நகர் மற்றும் குறிஞ்சி தெருக்களில் குடிநீர் தொட்டிகளை அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில் நேற்று(மார்ச்.16) குடிநீர் தொட்டிகளை மக்கள் பயன்பாட்டிற்க்கு வந்தது. 57 ஆவது வட்ட செயலாளர் ஐசக் முன்னிலையில் மண்டல குழு தலைவர். காமராஜர் திறந்து வைத்தார். 

News March 17, 2024

நாமக்கல் மக்களே இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்

image

நாமக்கல் மாவட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டது தொடர்பான புகார்களை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் 04286-280081, 04286-280082, 04286-280083, 04286-280084 ஆகிய தொலைபேசி எண்களிலும், 18004257021 கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம். என மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

News March 17, 2024

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள்

image

திருப்பூர், உடுமலை அனைத்து மகளிர் காவல் காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களிடையே
குழந்தை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு என்ற கருத்து அடிப்படையில் தனியார் திருமண மண்டபத்தில் திறனறி போட்டிகள் இன்று நடைபெற்றன. இப்போட்டிகளில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உடுமலை டிஎஸ்பி சுகுமாரன் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். 

News March 17, 2024

ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் நூலகம்

image

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி அணிகுதிச்சான் ஊராட்சி பூவாணிப்பட்டில் 2023 – 2024 திட்டத்தின் கீழ் ரூ.222.00 லட்சம் மதிப்பீட்டில் முழுநேர கூடுதல் பொது நூலக கட்டுமான பணிக்கு நேற்று (மார்ச்.16) சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார் .
இந்நிகழ்வில் மாவட்ட நூலக அலுவலர் ஆண்டாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்

News March 17, 2024

களமிறங்கியது தேர்தல் பறக்கும் படை குழு

image

சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் தருவதை தடுப்பதற்காக பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் நேற்று அமைக்கப்பட்டது . அதைத் தொடர்ந்து இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பணியாற்றுவதற்கான குழுவினர் சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து நேற்று புறப்பட்டனர். அவர்களுடன் வீடியோ கேமரா மேன் மற்றும் போலீசார் சென்றனர்.

News March 17, 2024

நாம் தமிழா் கட்சியினா் பிரசாரம்

image

சிவகங்கை, திருப்பத்தூரில் மக்களவை தேர்தலுக்கான வாக்குச் சேகரிப்பில் நாம் தமிழா் கட்சியினா் ஈடுபட்டனா். சிவகங்கை மக்களவைத் தொகுதி வேட்பாளராக வி.எழிலரசி அறிமுக நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து, கட்சியினருடன் வாகனங்களில் மருதுபாண்டியா்கள் தூக்கிலிடப்பட்ட இடத்துக்கு சென்று நினைவுத் தூண், மருதிருவா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

News March 17, 2024

தர்மபுரி: தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விவரம்

image

தர்மபுரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் விவரம்; 1.மாவட்டத் தேர்தல் அலுவலர் கலெக்டர் சாந்தி கைபேசி எண்- 9444161000  2.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம்- 9884447581  3.மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்சிஸ் ராஜ்குமார் -9445000908 4.மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சையது – 9445008135 இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!