India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவை தேர்தலில், திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவிற்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி திருச்சி தொகுதியில் மதிமுக போட்டியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த தேர்தலில் திருச்சி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர் வெற்றி பெற்றார்.
மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதி, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக கார்த்தி சிதம்பரம் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த தேர்தலிலும் கார்த்தி சிதம்பரம் மீண்டும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளது.
மக்களவை தேர்தலில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் திமுக சார்பில் ராமலிங்கம் வெற்றி பெற்றார்.
மக்களவை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.இந்த நிலையில் இன்று திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் காங்கிரஸ் இடையே 10 தொகுதிகள் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் கடலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் கடலூர் தொகுதியில் திமுக போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
அந்தியூர் அருகே புதுப்பாளையம் படவே காட்டூர் பகுதியில் தேர்தல் அதிகாரி முத்து மற்றும் போக்குவரத்து போலீசார் மாதேஸ்வரன் கொண்ட குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது பூலாம்பட்டியை சேர்ந்த ராஜா(22) என்பவர் தனது லாரியில் ரூபாய் 1,02,750 எடுத்து சென்றார். அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட போளூர் பகுதியில் கடலூர் சித்தூர் தேசிய நெடுஞ்சாலைகளில் போளூர் பறக்கும் படை தேர்தல் அதிகாரிகள் தற்போது தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாலையில் செல்லும் கார்கள் மற்றும் வாகனங்களை கண்காணிப்பு கேமரா மூலம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் .
நாடாளுமன்றத் தேர்தல் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தை பொருத்தவரை கடலூர், சிதம்பரம் என 2 லோக்சபா தொகுதிகள் உள்ளது.கடலூர் தொகுதியில் திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி என 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. சிதம்பரம் தொகுதியில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, அரியலூர் மாவட்டம், அரியலூர், குன்னம், ஜெயங்கொண்டம் என 6 தொகுதிகள் உள்ளன
ஆம்பூர் அருகே ஜாலாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கலீம்முல்லா (வயது 76). இவர் இன்று (மார்ச் 18) அதிகாலை 3 மணியளவில் ஆம்பூரில் இருந்து பெங்களூர் செல்லும் சாம்ராஜ் எக்ஸ்பிரஸில் தனது மகளை பார்க்க பெங்களூர் சென்றுள்ளார். அப்போது ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே திடீரென ஓடும் ரயிலில் அவர் மயங்கி விழுந்து இறந்து கிடந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை செய்கின்றனர்.
திருச்சி ஜங்ஷன் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் ரயில் பயணிகளின் நலன் கருதி இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் ரயிலில் பயணிகளின் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள நேரங்களில் இளைஞர்கள் படியில் தொங்கிக்கொண்டு செல்வது வாடிக்கையாக உள்ளது.இது போன்ற நேரங்களில் அடுத்து வரும் ரயிலில் பயணிக்க அறிவுறுத்தியுள்ளது.மேலும் இது போன்ற செயல்களை தவிர்த்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் என கடந்த 16ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்த நிலையில் முதல்வர் படம் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்த பதாகைகள் அகற்றப்பட்டு வருகின்றன. ஆனால் மூன்று நாட்களாகியும் திருமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள முதல்வர் படம் மற்றும் அரசின் சாதனை விளக்க பதாகைகள் இதுவரை அகற்றப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
Sorry, no posts matched your criteria.