Tamilnadu

News March 19, 2024

அரியலூர்: சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது

image

அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய 2 சிறுவர்கள் நேற்று நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக பள்ளி முடிந்து திரும்பிய 16 வயது மாணவியை காதலிப்பதாக கூறி, சிறுவர்கள் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அச்சிறுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 18 வயதுடைய சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரிக்கின்றனர். மேலும், மற்றொரு 18 வயது சிறுவனை தேடி வருகின்றனர்.

News March 19, 2024

மேல்பாதி கோவிலை திறக்க இன்று உத்தரவு

image

விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோவிலுக்கு சென்ற ஆண்டு பூட்டி சீல் வைக்கப்பட்ட நிலையில், கோவிலை திறப்பது தொடர்பாக பாமக வழக்கறிஞர் பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், இன்று (மார்ச் 19) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வருகின்ற மார்ச் 22 வெள்ளிக்கிழமை முதல் தினமும் கோவிலை திறந்து இரண்டு வேளை பூஜை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

News March 19, 2024

வேலூர்: பிரபல ரவுடி அதிரடி கைது

image

வேலூர் வள்ளலார் பகுதியைச் சேர்ந்தவர் சத்யராஜ் (36), கூலித் தொழிலாளி. இவர் நேற்று ரங்காபுரம் வழியாக வேலைக்கு நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த பிரபல ரவுடியான பிரபு சத்யராஜை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்றுள்ளார்.  இதுதொடர்பாக சத்யராஜ் சத்துவாச்சாரி போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து பிரபுவை இன்று (மார்ச் 19) கைது செய்தனர்.

News March 19, 2024

கிருஷ்ணகிரி: மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

image

வாடமங்கலம் கிராமத்தைச் கோவிந்தசாமி என்பவரின் மகன் சந்தோஷ்குமார் தனியார் பள்ளியில் 11-ம்வகுப்பு படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் வீட்டின் அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது பந்து வீட்டின் மீது விழுந்தது. பந்தை எடுக்க அங்கிருந்த குழாய் ஐ பிடித்த போது எதிர்பாரத விதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பாரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 19, 2024

திருப்பூரில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் அதிரடி

image

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள சூழ்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் 64 குழுக்கள் தேர்தல் விதிமுறைகள் தொடர்பான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.2,10,310-ஐ இன்று தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.

News March 19, 2024

தர்மபுரி அருகே விபத்து

image

அரூர் பகுதியை சேர்ந்தவர் தென்னரசு 28. இவர் மோட்டார் சைக்கிளில் ஆட்டியானூர் கிராமத்தை சேர்ந்த பரிமளா 29 என்பவரை டூவீலரின் பின்புறம் உட்கார வைத்துக் கொண்டு சென்றார். பறையபட்டி அரசுப்பள்ளி எதிரே வந்த அரசு பஸ், டூவீலர் மீது மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். அவர்கள் இருவரையும் அரூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதுகுறித்து மொரப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 19, 2024

திருவள்ளூர்: அதிநவீன கேமராக்கள் துவக்கம்

image

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட 44 முக்கிய சாலைகளில் குளோவிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் அதிநவீன 106 IP கேமராக்கள் மற்றும் 86 ANPR கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வந்தது. தற்போது இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் ஆவடி காவல் ஆணையாளர் கி.சங்கர் இன்று அதனை தொடங்கி வைத்தார்.

News March 19, 2024

கடலூர் சிறையில் கேமரா உடைப்பு

image

சென்னையை சேர்ந்தவர் ரவுடி தனசேகரன். பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட இவர் கடந்த 2 ஆண்டுகளாக கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் சிறையில் திரைப்படம் திரையிடப்பட்டது. அப்போது தனசேகர் தனக்கு விருப்பமான படத்தை திரையிடக் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்து சிசிடிவி கேமராவை உடைத்து வார்டனுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

News March 19, 2024

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை தகவல்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் துப்பாக்கி உரிமம் பெற்றுள்ள 186 துப்பாக்கி உரிமை தாரர்களில் தற்போது 148 உரிமைதாரர்கள் காவல் நிலையத்தில் துப்பாக்கியை ஒப்படைத்துள்ளனர். மேலும் மீதமுள்ள 38 துப்பாக்கி உரிமைதாரர்கள் வங்கி மற்றும் இதர பாதுகாவலர் பணியில் உள்ளதால் அவர்களிடமிருந்து சான்று பெறப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் இன்று(மார்ச்.19) தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 19, 2024

திருச்சி அருகே லஞ்சம் வாங்கிய காவலர்கள்

image

காட்டுப்புத்தூர், திருச்சி-நாமக்கல் நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை வழிமறித்து லஞ்சம் வாங்கியதாக ரோந்து பணியில் ஈடுபட்ட வடிவேல்,செல்வம் ஆகிய 2 எஸ்.எஸ்.ஐ,-களையும், தலைமை காவலர் பாலச்சந்திரன்,முதன்மை காவலர் சாந்தமூர்த்தி,காவலர்கள் நந்தகுமார், அண்ணாமலை ஆகிய 4 காவலர்கள் என மொத்தம் 6 போலீசார்களை ஆயுதப்படைக்கு மாற்றி இன்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவு பிறப்பித்தார்.

error: Content is protected !!