India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் செங்கோட்டையில் இன்று (மார்ச் 28) வியாழக்கிழமை தேர்தல் விழிப்புணர்வு இயக்கங்கள் மேற்கொள்ளப்பட்டன. பெண்கள் தெருக்களில் விளக்கு ஏற்றி விழிப்புணர்வு நடத்தினர். மேலும் 100% வாக்குப்பதிவு வலியுறுத்தி அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தேர்தல் பணி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவாரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பாக மீம்ஸ்கள் வரவேற்கப்படுகின்றன. voter education and electoral participation என்ற தலைப்பின் கீழ் தயாரிக்க வேண்டும், மேலதிக விபரங்களுக்கு 9578290250 என்ற வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளலாம். கடைசி தேதி 2/4/24 என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் தொகுதியில் இயக்குநர் தங்கர் பச்சான் பாமக சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில், தங்கர் பச்சானை ஆதரித்து நாளை 29ஆம் தேதி குறிஞ்சிப்பாடி வட்டம் குள்ளஞ்சாவடி அண்ணாபாலத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்கு இந்தியா கூட்டணி சார்பில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார் இந்நிலையில் நேற்று அமைச்சர்களுடன் தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தாக்கல் செய்தார் இன்று மனு மீதான பரிசீலனை நடைபெற்றது இதில் திருமாவளவன் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக பிரதான கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட 53 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் 26 மனுக்கள் பரிசீலனைக்கு பின்னர் ஏற்கப்பட்டன. 27 மனைகள் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வேட்பு மனு வாபஸ் தேதிக்கு பின் இறுதிப் போட்டியாளர்கள் விபரம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது தொடர்ந்து பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட பேச்சு வேட்பாளர்கள் மொத்தம் 51 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் அதில் 13 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும் மீதம் உள்ள வேட்பு மனுக்கள் நிராகரிக்கப் பட்டதாக காஞ்சிபுரம் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கலைச்செல்வி அறிவித்தார்.
தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சி பகுதியில் இன்று விரைவில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் திருவிழா விழிப்புணர்வு அழைப்பிதழை வீடு வீடாக சென்று ஆட்சித்தலைவர் ஷஜீவனா வழங்கினார். இதில் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
அல்லிநகரம் ஸ்ரீ வீரப்ப அய்யனார், சோலைமலை அய்யனார் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு
இன்று காலை
11:30 மணியளவில் பனசலாறு மலைக்கோயில்
ஸ்ரீ வீரப்ப அய்யனார் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. இவ்விழாவில் அல்லிநகரம் கிராம கமிட்டி நிர்வாகிகளும் பக்தர்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூடலூர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இடுக்கி மாவட்டம் தேக்கடியில் குமுளி கிராம பஞ்சாயத்து மற்றும் தேக்கடி ஹார்ட்டிகல்ச்சர் சொசைட்டி இணைந்து நடத்தும்16 வது மலர் கண்காட்சி மார்ச் 27 முதல் மே 12 வரை நடைபெறுகிறது. இதில் பல வகையான வண்ண மலர்கள் மற்றும் அழகு தாவரங்கள் மற்றும் வீட்டு அலங்கார செடிகள் விற்பனை மற்றும் கண்காட்சி நடைபெறும். குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நிலை குறைவால் மரணமடைந்தார் அவருக்கு மதிமுகவின் நாமக்கல் நகரக் கழகத்தின் சார்பில் நாமக்கல்லில் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது இந்த நிகழ்வில் நாமக்கல் நகர செயலாளர் வைகோ பாலு தலைமையில் மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணன் தொண்டரணி அமைப்பாளர் மூர்த்தி தொழிலாளர் அணி சண்முகம் ஆபத்துகள் அணி அன்பு மாவட்ட பிரதிநிதி எருமப்பட்டி மனோகரன் கஸ்தூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
Sorry, no posts matched your criteria.