Tamilnadu

News March 19, 2024

தென்காசி அருகே வெறி நாய்களின் தொல்லை 

image

தென்காசி, சங்கரன்கோவிலில் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சங்கரநாராயண சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் பல ஆயிரம் மக்கள் நடமாடக் கூடிய நகர் பகுதி முழுவதும் வெறி நாய்களின் தொல்லைகள் அதிகரித்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் நகராட்சி நிர்வாகம் மக்களை தெருநாய் தொல்லையில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

News March 19, 2024

சிவகங்கை: ரூ.50,000 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லக்கூடாது

image

மக்களவை தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள், வியாபாரிகள் ரூ.50,000 க்கு மேல் ரொக்கம் மற்றும் ரூ.10,000 க்கு மேல் மதிப்புள்ள பொருட்களை உரிய ஆவணங்களுடன் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ள கலெக்டர் ஆஷா அஜித், பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம், பொருட்களை திரும்பப்பெற கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குறைதீர் கமிட்டியிடம் ஆவணங்களை சமர்ப்பித்து வாங்கிகொள்ளலாம் எனக் தெரிவித்துள்ளார்.

News March 19, 2024

புதுவை: மதுபானக் கடைகளை இரவு 10 மணிக்கு மூட உத்தரவு

image

புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரியில் உள்ள அனைத்து வகையான மதுபானக் கடைகளும், இரவு 10.00 மணிக்கு மூட வேண்டும் என புதுச்சேரி கலால்துறை சார்பில் உத்தரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை மீறும் மதுபான கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்க்கப்பட்டுள்ளது.

News March 19, 2024

மதுரை: சித்திரை திருவிழா முக்கிய அறிவிப்பு

image

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளதாக மதுரை கள்ளழகர் கோவில் நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதிகாலை 5:51 மணி முதல் 6:10 மணிக்குள்ளாக தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள உள்ளதாகவும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 19, 2024

பெண்ணிடம் நூதன முறையில் பணம் பறிப்பு

image

மேற்கு தாம்பரம், கன்னடப்பாளையத்தை சேர்ந்தவர் திவ்யா. இவரிடம் கடந்த 12ஆம் தேதி செல்போனில் பேசிய மர்ம நபர்கள் பஜாஜ் பைனான்சில் இருந்து பேசுவதாகவும், ரூ. 4 லட்சம் லோன் தருவதாகவும், இதற்காக உரிய ஆவணம் மற்றும் பணம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதனை நம்பிய திவ்யா ரூ.85,000 பணம் அனுப்பியுள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த திவ்யா நேற்று தாம்பரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

News March 19, 2024

ராணிப்பேட்டை எஸ்.பி முக்கிய அறிவிப்பு

image

இராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் விதிமுறை மீறல் மற்றும் மதுவிலக்கு சம்மந்தமாக புகார்களை தெரிவிக்க இராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல்
காவல் கட்டுப்பாட்டு அறை கைபேசி எண் 93638 68465-ஐ
தொடர்பு கொண்டும்/Whatsapp மூலமாகவும் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V கிரண் ஸ்ருதி, இ.கா.ப., தெரிவித்துள்ளார்.

News March 19, 2024

முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல்-2024 பாதுகாப்பு பணிக்கு மாவட்டத்தை சார்ந்த 65 வயதிற்குட்பட்ட விருப்பமுள்ள முன்னாள் படை வீரர்கள் மற்றும் இளநிலை படை அலுவலர்கள் (JCO), ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அனைத்து நாட்களிலும் அணுகலாம். மேலும், இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 19, 2024

ஈரோடு: 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

image

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா மார்ச் 25,26 இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி மார்ச் 25ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மார்ச் 26ஆம் தேதி இரவு 9 வரை பண்ணாரி, திம்பம், ஆசனூர் வழியாக மைசூர் செல்லும் காய்கறி மற்றும் அனைத்து வாகனங்களும், மாற்று பாதையில் செல்ல ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News March 19, 2024

சேலம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (மார்ச் 20) தொடங்கவுள்ளது. வேட்பு மனுத்தாக்கல் செய்யும் போது அதிகபட்சமாக வேட்பாளர் உட்பட 5 நபர்கள் மட்டுமே அலுவலகத்திற்குள் வர அனுமதிக்கப்படுவர். வேட்பு மனு தாக்கல் செய்யும் போது மேற்படி அறிவுறுத்தல்களை இந்திய தேர்தல் ஆணையத்தால் தீவிரமாக கண்காணிக்கப்படும். விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் ஆட்சியர் தெரிவித்தார்.

News March 19, 2024

அரியலூர்: சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது

image

அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய 2 சிறுவர்கள் நேற்று நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக பள்ளி முடிந்து திரும்பிய 16 வயது மாணவியை காதலிப்பதாக கூறி, சிறுவர்கள் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அச்சிறுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 18 வயதுடைய சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரிக்கின்றனர். மேலும், மற்றொரு 18 வயது சிறுவனை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!