Tamilnadu

News April 3, 2024

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஒருவர் குத்தி கொலை

image

ஶ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து(42). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு மாரிமுத்து தனது வீட்டிலிருந்து கை காட்டி கோயில் பஜாருக்கு நடந்து வந்தபோது, மர்ம நபரால் குத்தி கொலை செய்யப்பட்டார்.அவர் முன் விரோதத்தில் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News April 3, 2024

மதுரையில் பலத்த பாதுகாப்பு..!!

image

மதுரையில் நாளை மத்திய அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நாளை மறுநாள் காலை மீனாட்சி அம்மன் கோவிலில் அவர் தரிசனம் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுக்கூட்டம் நடைபெறும் பழங்காநத்தம் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் பகுதிகளில் இன்று முதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

News April 3, 2024

புகையிலை கடத்திய வாலிபர் மீது வழக்கு பதிவு

image

கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் அடுத்த வஞ்சரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முகமதியர்பேட்டை கிராம பகுதியில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் வாகனத்தை சோதனை செய்ததில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

News April 3, 2024

பதற்றமான வாக்குச்சாவடிகளை எஸ். பி நேரில் ஆய்வு

image

வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  நீடாமங்கலம், ஒளிமதி ஆகிய பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை நேற்று (02.04.2024) இரவு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், நேரில் பார்வையிட்டார்.

News April 3, 2024

நாமக்கல்: 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இல்லை

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று(ஏப்.3) முதல் அடுத்த மூன்று நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும், மழை பெய்ய வாய்ப்பு இல்லை, வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 102.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 77 டிகிரியாகவும் இருக்கும், காற்று மணிக்கு முறையே 8 கீ.மீ முதல்10 கீ.மீ., வேகத்தில் தென் கிழக்கு திசையில் இருந்து வீசும் என கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

News April 3, 2024

செல்போனை தவறவிடாதீர்: ரயில்வே போலீஸ்

image

குன்னூர், மலை ரயில் நிலையத்தில், சீசனை ஒட்டி, போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நேற்று முதல் ஒலி பெருக்கி மூலம் பயணிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மலை ரயில், குகைகளை கடக்கும்போது தங்களது மொபைல் போன்களை தவற விடாதீர்கள் எனக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

News April 3, 2024

ஓமலூர்: பிரச்சார ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

image

2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சருமான துரை முருகன் சேலத்தில் மேற்கொள்ளவுள்ள தேர்தல் பிரச்சார ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஓமலூரில் நேற்று(ஏப்.3) நடைபெற்றது. இதில் எம்எல்ஏ ராஜேந்திரன் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கி உரையாற்றினார். மேலும் கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் ,திமுக தேர்தல் பொறுப்பாளர் கலந்து கொண்டனர்.

News April 3, 2024

விழுப்புரம்: அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஏப்ரல் 2) அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது. இதி‌ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாவட்ட துணை செயலாளர், கழக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த வழக்கறிஞர் கே.பி.கலையரசன் கலந்துகொண்டுள்ளார். இதில் மற்ற கட்சி சார்பிலும் கலந்து கொண்டனர்.

News April 3, 2024

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்

image

மயிலாடுதுறை மாவட்டம் அருகே கூறைநாடு பகுதியில் இன்று (ஏப்.3) சிறுத்தை நடமாட்டத்தை கூறைநாடு சாலையில் சிறுத்தை சுற்றித்திருந்த சிசிடிவி வீடியோ வெளியானதால் பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். மேலும் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து சிறுத்தை குறித்து தகவல் தெரிந்தால் 9626709017 என்ற எண்ணை தெடர்புகொள்ளுமாறு மயிலாடுதுறை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News April 3, 2024

மக்களவையில் ‘பிரபாகரன் குரல்’ ஒலிக்கும்!

image

மக்களவையில் பிரபாகரன் பெயர் ஒலிக்கும் என்று நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகிரி வேட்பாளர் வித்யாராணி செய்தியாளரிடம் தெரிவித்தார். மேலும் தான் பாஜகவில் இருந்தபோது ஆக்டிவாக இல்லை என்பதை உணர்ந்த சித்தப்பா சீமான், தனக்கு உறுதுணையாக இருப்பதாக கூறி இந்த வாய்ப்பை வழங்கியுள்ளார். மாற்று அரசியல் உறுதுணையாக இருக்கும். மக்களவையில் ‘பிரபாகரன் குரல்’ ஒலிக்கும் என்று அதிரடியாக கூறினார்.

error: Content is protected !!