India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலையில் முக்கிய வீதிகளில் நடந்து சென்று இந்தியா கூட்டணியின் தி.மலை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து பொதுமக்களிடம் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை வாக்கு சேகரித்தார். நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு, துணை சபாநாயகர் பிச்சாண்டி மற்றும் திமுக மாவட்ட நிர்வாகிகள் பலர் முதல்வருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு போலீஸ் குவிப்பு
திண்டுக்கல் அடுத்த குழந்தைபட்டியை சேர்ந்த கட்டட காண்ட்ராக்டர் பாலமுருகன் (32), பழனியில் இருந்து திண்டுக்கல் மார்க்கமாக சென்ற ரயிலில் வந்தபோது ஒட்டன்சத்திரம் ரயில் நிலையம் அருகே நேற்று ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்தில் பலியானார். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளா் டி.டி.வி.தினகரனை ஆதரித்து, தேனியில் நாளை நடைபெற உள்ள வாகனப் பிரசார ஊா்வலத்தில் (ரோட் ஷோ) உள்துறை அமைச்சா் அமித்ஷா பங்கேற்கிறாா். நாளை 4 மணிக்கு தேனி வருகை புரியும் அவர் தேனி-பெரியகுளம் சாலை, பாரத ஸ்டேட் வங்கித் திடலிலிருந்து மதுரை சாலை வழியாக பங்களாமேடு திடல் வரை நடைபெறும் வாகனப் பிரசாரத்தில் பங்கேற்கிறாா்.இதனால் அங்கு போலீஸ் குவிப்பு
மதுரை கோட்டத்தில் இந்த மாதத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வரும் ஏழாம் தேதி முதல் 14ஆம் தேதி வரை தூத்துக்குடியில் இருந்து மாலை 6: 25 மணிக்கு செல்லும் நெல்லை ரயிலும் நெல்லையிலிருந்து காலை 7: 35 க்கு புறப்படும் தூத்துக்குடி ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது .
தேவிபட்டினம் முனியசாமி என்பவரிடம் அவரின் தொழிலை மேம்படுத்த ரூ.15 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ஆவண செலவாக ரூ.14 லட்சம் வாங்கினாராம். கடன் வாங்கி தராமல் தான் வாங்கிய பணத்திற்காக போலி செக் கொடுத்து ஏமாற்றியதாக ராமநாதபுரம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். வழக்கு விசாரணைக்கு நேற்று பவர்ஸ்டார் ஆஜராகவில்லை. இதனால் நீதிபதி வழக்கினை வரும் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
கிருஷ்ணகிரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட, பழையபேட்டை நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில், அடிப்படை வசதிகள் மற்றும் வாக்கு சாவடி மைய எண் அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் இன்று(ஏப்.3) தரும்புரி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள பாமகவின் தருமபுரி மக்களவைத் தொகுதி வேட்பாளராக சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அன்புமணி இன்று வாக்கு சேகரிக்க உள்ளார்.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை நேற்றைய (ஏப்.2) நிலவரப்படி 18 புகார்கள் கட்டணமில்லா தொலைபேசி மூலம் பெறப்பட்டுள்ளது.
இதில் நெல்லை தொகுதியில் 9 புகார்களும், அம்பை நாங்குநேரி தொகுதியில் தலா ஒரு புகாரும், பாளை தொகுதியில் 5 புகார்களும் தெரிவிக்கப்பட்டு மொத்தம் 17 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. சிவிஜில் செயலின் மூலம் 90 புகார்கள் இதுவரை பெறப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள சிலட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் மகேஸ்வரன் தேசிய அளவில் நேற்று நடந்த பாரா ஒலிம்பிக் பவர் லிப்டிங் போட்டியில் 72 கிலோ எடை பிரிவில் தங்கப் பதக்கமும், மூன்று லட்சம் ரூபாய் ரொக்க பரிசும் வென்று சாதனை படைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து, மாணவனை ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பாராட்டினர்.
“புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவுக்கான விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் திருநங்கை வாக்காளர்களின் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மாவட்ட வருவாய் அலுவலா் மா.செல்வி தொடங்கி வைத்தாா். இதில் வருவாய்க் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Sorry, no posts matched your criteria.