India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில், தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளருக்கு ஆதரவாக வள்ளலார் திடலில் நேற்று(ஏப்.) மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, எம்எல்ஏக்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்று மாம்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். சுமார் 50,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடும் அதிகரித்துவருகிறது. வெயிலால் தேயிலை பறிக்கும் தொழிலாளர்களுக்கு உடல் சோர்வு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க கடந்த சில நாட்களாக குடை போன்ற தொப்பியை அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நிழல் போன்ற தாக்கம் ஏற்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக, மதுரை சித்திரைத் திருவிழாவில், தண்ணீரில் மூழ்கியும், கூட்ட நெரிசலில் சிக்கியும் சிலா் உயிரிழந்தனா். இதை தடுக்க, 2023ம் ஆண்டு காவல் துறை சாா்பில் தற்காலிக படிகள் அமைக்கப்பட்டன. தற்போது, மதுரை மாநகராட்சி சாா்பில் வைகையாற்றில், ’நமக்கு நாமே திட்டத்தில்’ ரூ. 50 லட்சத்தில் ஆழ்வாா்புரம், ஓபுளா படித்துறை பகுதிகளில் நிரந்தர படிக்கட்டுகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சூளகிரி கோட்டை தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இப்பகுதியில் குடிநீர் வரவில்லை என்று பெண்கள் காலிக்குடங்களுடன் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் சூளகிரி போலீசார் அவர்களிடம் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தனர். இதை அடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உள்பட்ட ரோடுமாமாந்தூர் கிராம அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் தேர்தல் பொதுப் பார்வையாளர் அசோக் குமார் கார்க் நேற்று ஆய்வு மேற்கொண்டார். வாக்கு சாவடியில் வாக்காளர்களுக்கு வாக்களிக்க உரிய வசதி உள்ளதா எனவும் மேலும் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை குறித்து ஆய்வு செய்தார்
தஞ்சாவூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் மாா்ச் 30ம் தேதி வரையிலான தேர்தல் செலவின கணக்கு விவரங்களை ஏப்.1ம் தேதி தாக்கல் செய்தனர். இதற்கான 2ம் கட்ட செலவின ஒத்திசைவுக் கூட்டம் ஏப்.10ம் தேதியும், 3ம் கட்ட ஒத்திசைவுக் கூட்டம் ஏப்.17ம் தேதியும் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி I.N.D.I.A கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் கருங்கல் தலைமை தேர்தல் அலுவலகத்தில், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ தலைமையில் நேற்று(ஏப்.3) இரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் மனோதங்கராஜ், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி கூட்டணி வேட்பாளர் விஜய் வசந்த் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
அன்னூரில் நடிகர் செந்தில் பாஜக வேட்பாளர் எல்.முருகனுக்கு (ஏப்ரல். 3) வாக்கு சேகரித்தார். நீலகிரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து திரைப்பட நடிகர் செந்தில் அன்னூர் ஒன்றியத்துக்குட்பட்ட கணேசபுரம், கணுவக்கரை பகுதிகளில் வாக்கு சேகரித்தார். இதில் வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, செயலாளர் ஜெயபால், ஒன்றிய தலைவர்கள் திருமூர்த்தி ரத்தினசாமி கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
திருச்சி உறையூர் ராமலிங்க நகர் 5வது குறுக்கு தெருவை சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் ராஜேஷ் (31). இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டு நேற்று மாலை வந்த போது வீட்டின் பூட்டு திறந்து பீரோவிலிருந்த 4பவுன் தங்க நகைகள், ரூ.28ஆயிரத்தைத் திருடியது தெரியவந்தது. இதையறிந்த உறையூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார்கள்.
நாமக்கல்லில், கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நாமக்கல் மாவட்ட மையம் சாா்பில், கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் ஏப்.1 முதல் ஜூன் 3 வரையில் நடைபெறவுள்ளது. அனைத்து வயதினரும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.