Tamilnadu

News April 4, 2024

அதிகாலையில் தீப்பந்தம் ஏந்தி குவிந்த பக்தர்கள்

image

சிவகிரியில் பழமை வாய்ந்த ஶ்ரீ பொன்காளியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறும். இந்நிலையில் நேற்று பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் பெண்கள் மாவிளக்கு எடுத்து பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து நள்ளிரவில் குதிரை துள்ளல் நிகழ்ச்சியும், அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது. இன்று அதிகாலை 4 மணியளவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீப்பந்தம் ஏந்தி அம்மனை வழிபட்டனர்.

News April 4, 2024

பைக்கில் இருந்து தவறி விழுந்து பெண் மரணம்

image

குச்சனூரைச் சேர்ந்தவர் பவுன்ராஜ். இவர் தனது மனைவி கலைச்செல்வியுடன் டூவீலரில் சங்கராபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். தண்ணீர் டேங்க் அருகே சென்றபோது பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த கலைச்செல்வி திடீரென கீழே விழுந்தார். தலையில் பலத்த காயங்களுடன் சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

News April 4, 2024

ஈரோடு: எல்.முருகன் மீது வழக்குப்பதிவு

image

நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளரும் மத்திய இணையமைச்சருமான முருகன் போட்டியிடுகிறார். சில நாட்களுக்கு முன் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில், தேர்தல் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். இந்த கூட்டத்திற்கு உரிய அனுமதி பெறவில்லை என உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் உமாசங்கர் அளித்த புகாரின்படி, சத்தியமங்கலம் போலீசார், முருகன் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News April 4, 2024

தூத்துக்குடியில் இன்று முதல் வாக்குப்பதிவு 

image

நாடாளுமன்ற தேர்தலையொட்டி 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தங்கள் வீடுகளில் இருந்தே தபால் வாக்கு மூலம் வாக்களிக்க இந்திய தோ்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 4000 பேர் வாக்களிக்க உள்ளனர். அவர்களின் வீடுகளுக்கு இன்று முதல் தேர்தல் அதிகாரிகள் சென்று தபால் வாக்குகளை சேகரிக்க உள்ளனர்.

News April 4, 2024

திருப்பத்தூர் அருகே அதிர்ச்சி சம்பவம்

image

ஆம்பூர் அடுத்த கைலாச கிரி மலைப்பகுதியில் இருந்து இளைஞர் ஒருவர் திடீரென  தவறி விழுந்து தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பலிாயனார். நேற்று நடந்த இச்சம்பம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த உம்ராபாத் போலீசார் இளைஞரின் உடலை கைப்பற்றி இறந்தவர் யார், எந்த ஊர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 4, 2024

பாலியல் தொல்லை- வழிகாட்டு நெறிமுறை

image

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. பள்ளியில் மாணவர் மனசு பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும் எனவும், ஓட்டுநருக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portal-ல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

News April 4, 2024

டூவீலரிலிருந்து தவறி விழுந்து பெண் பலி

image

வடமதுரை அருகே பிலாத்து கிராமம் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் சாதிக் அலி, இவரது மனைவி சாபுரா பீவி இருவரும் நேற்று முன்தினம் டூவீலரில் சென்றனர்.திண்டுக்கல் – திருச்சி நான்கு வழிச்சாலையில் கல்லாத்துப்பட்டி பாலம் அருகே சென்ற போது டூவீலர் நிலைதடுமாறியதில் இருவரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.இதில் சாபுரா பீவி படுகாயங்களுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். 

News April 4, 2024

புதுக்கோட்டை மாவட்டத்தில் 13.45 லட்சம் வாக்காளா்கள்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 13.45 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா் என ஆட்சியா் ஐ.எஸ்.மொ்சி ரம்யா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த ஜன.22-ஆம் தேதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு தோ்தல் அறிவிப்பு வரும் வரையிலும் வாக்காளா் சோ்க்கை மற்றும் நீக்கும் பணிகள் நடைபெற்றன.இதன்படி,புதிதாக 10,806 வாக்காளா்கள் சோ்க்கப்பட்டனா்.

News April 4, 2024

திருச்சி: தேர்தல் பணிமனை திறப்பு

image

திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கருப்பையாவை வெற்றி பெற வைப்பது தொடர்பான, தேர்தல் பணிகள் மேற்கொள்வது மற்றும் ஆலோசனைகள் மேற்கொள்வதற்காக தேர்தல் பணிமனை நேற்று திறக்கப்பட்டது. இதனை முன்னாள் அமைச்சர் மனோகரன், முன்னாள் எம்பி குமார், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, முன்னாள் எம்பி ரத்தினவேல் ஆகியோர் கூட்டாக இணைந்து குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தனர்.

News April 4, 2024

என் மகனுக்கு சீட்டு கேட்டேனா? சபாநாயகர் விளக்கம்

image

நாங்குநேரி பரப்பாடி அருகே நேற்று (ஏப்ரல் 3) புதிதாக கட்டப்பட்டுள்ள ஆயத்த ஆடைகள் கடை திறப்பு விழா நடைபெற்றது. இதன் சிறப்பு விருந்தினராக சபாநாயகர் அப்பாவு கலந்துகொண்டார். தொடர்ந்து செய்தியாளரிடம் சபாநாயகர் கூறும்போது, நெல்லை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட என் மகனுக்கு சீட்டு கேட்டு தலைமைக்கு நான் அழுத்தம் கொடுத்ததாக வந்த தகவல் உண்மைக்குப் புறம்பானது என கூறினார்.

error: Content is protected !!