Tamilnadu

News April 5, 2024

சதுரகிரிக்கு நாளை முதல் அனுமதி

image

வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி கோயிலுக்கு பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு நாளை ஏப்.6 ஆம் தேதி முதல் ஏப்.9 ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இரவில் மலை கோயிலில் பக்தர்கள் தங்க அனுமதி கிடையாது. அனுமதிக்கப்பட்ட நாளில் மழை பெய்தால் மலையேற செல்ல தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 5, 2024

குளிர்பானத்தில் கிடந்த ரப்பர் பொருள்!

image

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அருகே உள்ள ஒரு கடையில் இன்று மதிச்சியம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் தனது குழந்தைக்கு பிரபலமான குளிர்பானம் ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது அந்த குளிர்பானத்தில் ரப்பர் போன்ற பொருள் ஒன்று கிடந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளார். இதுகுறித்து சுகாதார துறையினர் கடையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 5, 2024

பாஜக வேட்பாளர் மிரட்டல் – அமைச்சர் கண்டனம்

image

அதிகாரியை மிரட்டிய வீடியோவிற்கு டி.ஆர்.பி.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். ‘அதிகார போதையில் பாஜகவினர் அதிகாரிகள் மட்டுமல்ல, மக்களையே மதிப்பதில்லை. இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களின் நிலைமை,அதிகாரிகளின் நிலைமை என்னவாகும்? எனது வாகனம் தினந்தோறும் சோதிக்கப்படுகிறது. அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பது நமது கடமை. எந்த அதிகாரியையும் இப்படி மிரட்டுவது ஒருபோதும் சரி அல்ல’ என x தளத்தில் பதிவு செய்துள்ளார்.

News April 5, 2024

காஞ்சிபுரம் அருகே கள்ளக்காதலால் வெறிச்செயல்

image

குன்றத்தூர் அருகே மாங்காடு பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த புஜகர் (38) மற்றும் சோனியா(30) வசித்து வரும் நிலையில் அதே பகுதியில் உள்ள மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பர்மனுக்கு (40)  சோனியா பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்ப்பட்டுள்ளது.இதற்கு இடையூறாக இருந்த கணவன் புஜகரை கொலை செய்து விட்டு நாடகமாடி வந்த நிலையில் போலீஸ் விசாரணையில் இருவரும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

News April 5, 2024

தர்மபுரி அருகே நாகப்பாம்பு: பொது மக்கள் ஓட்டம்

image

நல்லம்பள்ளி வட்டம் பட்டாகப்பட்டி கிராமத்தில் விவசாயி ஒருவரது வீட்டில் ஏப்ரல் 5ஆம் தேதி நாகப்பாம்பு ஒன்று புகுந்ததாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர்  வெங்கடேஷ் தலைமையிலான குழு பாம்பு பிடிக்கும் கருவியை பயன்படுத்தி பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையுடன் ஒப்படைத்தனர். பாம்பு படம் எடுத்து ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

News April 5, 2024

வேலூர் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

image

மக்களவைத் தேர்தல் முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக வந்துள்ள தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த துணை ராணுவ படையினர் இன்று (ஏப்ரல்.5) வேலூர் சைதாப்பேட்டை ஆற்காடு சாலையில் கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்த அணி வகுப்பு ஊர்வலத்தை டிஎஸ்பி திருநாவுக்கரசு துவக்கி வைத்தார். இதில் 200க்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினர் கலந்து கொண்டனர்.

News April 5, 2024

பாஜக வேட்பாளர் மீது கலெட்டர் அதிரடி நடவடிக்கை

image

கோபிசெட்டிபாளையத்தில் தனது காரை சோதனை செய்த தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளுக்கு திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம் மிரட்டல் விடுத்த வீடியோ வெளியாகி இருந்தது. இதையடுத்து, திருப்பூர் மாவட்டம் குன்னாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

News April 5, 2024

தருமபுரி: தேசிய நெடுஞ்சாலையில் தீ விபத்து

image

தருமபுரி மாவட்டம் சோகத்தூர் கூட்ரோடு தேசிய நெடுஞ்சாலையில் இன்று(ஏப்.5) காலை 6 மணியளவில் எட்டிமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவரின் கார் மின்கசிவு ஏற்பட்டு தீ பிடித்து எரிந்தது. விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேஷ் தலைமையிலான குழு, தண்ணீரை குழாய் வழியாக பீச்சி அடித்து தீயை முழுவதுமாக அணைத்தனர். இந்த விபத்தில் காரின் பாதி பகுதி எரிந்து சேதமானது.

News April 5, 2024

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

image

கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்ட நிலையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சடலமாக கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு பொதுமக்கள் இன்று காலை தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு அவர் யார்? கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 5, 2024

ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் தேரோட்டம்

image

திருச்சி, திருவானைக்கோவில் அமைந்திருக்கும் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் கோயில் திரு தேரோட்டம் வரும் 8ம் தேதி நடைபெற இருப்பதால், அதை முன்னிட்டு 245ஆம் ஆண்டு மண்டகப்படி விழாவில் அபிஷேகம் நடைபெற்றது. அதுசமயம் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் வீதி விழா வந்தார்கள். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!