Tamilnadu

News January 4, 2026

தேனி: பட்டாவில் மாற்றம் செய்வது இனி ரொம்ப ஈசி..

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது <>TN nilam citizen portal <<>>தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 4, 2026

சென்னையில் வாடகை வீட்டுக்கு போறீங்களா?

image

சென்னையில், வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News January 4, 2026

குமரி: அதிகாரி வீட்டில் திருடிய பெண் கைது

image

மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற வன அதிகாரி செல்லத்துரை. இவரது வீட்டில் இருந்த 40 பவுன் நகை, ரூ30,500 திருடப்பட்டது தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் விசாரித்து வந்தனர். இதையடுத்து அவரது வீட்டில் வேலை செய்த மாங்கரையைச் சேர்ந்த பிரேமா 3 மாதத்திற்கு முன் வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டார். இவரை அழைத்து விசாரித்த போது அவர் திருடியதை ஒப்பு கொண்ட நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர்.

News January 4, 2026

விருதுநகரில் வாகன பொது ஏலம் அறிவிப்பு

image

விருதுநகர் மாவட்ட உதவி ஆணையர்களால் அலுவலகத்தில் பயன்பாட்டில் இருந்த டாடா இண்டிகோ சீருந்து வாகனம் (TN 04 AG 8118) கழிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மேற்படி இந்த வாகனம் பொது ஏலத்தில் விடப்பட உள்ளது. எனவே வரும் ஜன.8 அன்று பொதுமக்கள் முன்னிலையில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொது ஏலம் விடப்படுவதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுபத்ரா தெரிவித்துள்ளார். விருப்பமுடையோர் ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

News January 4, 2026

தூத்துக்குடி: இனி பட்டா பெயர் மாற்றம் ஈஸி

image

தூத்துக்குடி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

News January 4, 2026

நெல்லை: இனி பட்டா பெயர் மாற்றம் ஈஸி

image

நெல்லை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

News January 4, 2026

புதுவை: செவிலியர் பணி குறித்து இணையத்தில் வெளியீடு

image

புதுவை இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், செவிலியர் பதவிக்கான நேரடி நியமனத்திற்கு விண்ணப்பித்தவர்கள், வழங்கப்பட்ட தற்காலிக மதிப்பெண்கள் மற்றும் முன்மொழியப்பட்ட இட ஒதுக்கீடு ஆகியவை அதிகாரப்பூர்வ இணையதளமான www.igmcri.edu.in இல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான ஆட்சேபனைகளை ஜன.10-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 4, 2026

திருச்சி: காவல்துறை சார்பில் முக்கிய அறிவிப்பு

image

பொதுமக்களின் நலன் கருதி திருச்சி போக்குவரத்து காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் செல்போன் பயன்படுத்திக் கொண்டே வாகனத்தை இயக்க வேண்டாம் எனவும், விலைமதிப்பற்ற உயிரை பணயம் வைக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளது. மேலும் சாலை விதிகளை மதிப்போம், பாதுகாப்பாக பயணிப்போம்.
சாலை விதிகளை மீறுவோர் குறித்து புகார் தெரிவிக்க மாவட்ட காவல் அலுவலக உதவி எண் 8939146100 அழைக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

News January 4, 2026

தருமபுரி: விதிமீறி செயல்பட்ட 16 மின்னணு தராசுகள் பறிமுதல்

image

தருமபுரி தொழிலாளா் நலத் துறை துணை ஆய்வாளா் அ.சு.சாந்தி தலைமையில் உதவி ஆய்வாளா்கள் ப.திவ்யா, முத்திரை ஆய்வாளா் வீ. தீபாபாரதி ஆகியோா் தருமபுரி பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனா். அதில் எடையில் குறைபாடு, முத்திரையிடப்படாதது என விதிமுறைகளை மீறி பயன்படுத்தப்பட்ட 16 மின்னணு தராசுகளை, தருமபுரி தொழிலாளா் துறையினா் பறிமுதல் செய்தனா். பின் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 4, 2026

குமரி: ஜன.8ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

குமரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஜன.8-ஆம் தேதி (வியாழன்) காலை 10.30 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து ஆட்சியர் தலைமையில் நடைபெறும். இக்கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து நவம்பர் 2025 மாத விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட விவசாயம் தொடர்பான மனுக்களுக்கான பதில்கள் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!