India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சியில் சொத்து உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய 2024-25 நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியினை வரும் ஏப்ரல் 30ம் தேதிக்குள் செலுத்தினால் 5 % ஊக்கத் தொகை பெறலாம் எனவும், பொதுமக்கள் சிரமமின்றி வரி செலுத்த ஏதுவாக நகராட்சி கணிணி வரிவசூல் மையத்திலும் நகராட்சி இணைய தள முகவரியிலும் செலுத்தலாம் என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
திருப்புகலூர் காசிநாதன் மனைவி ஆனந்தவள்ளி (வயது 54). இவர் நேற்று தனது மகளின் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிளை மறித்து அதில் ஏறி வந்துள்ளார். வரும் வழியில் திடீரென ஆனந்தவள்ளிக்கு ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டு நாகை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டவர் இன்று உயிரிழந்தார். திருக்கண்ணபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பெஸ்கி உயர்நிலைப் பள்ளியில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி ஆசிரியர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது. இதில் ஆசிரியர்களுக்கான பணிகள் பிரித்து வழங்கப்பட்டது. மேலும் தேர்தலை கையாளும் முறையை பற்றி வகுப்பில் கற்றுத் தரப்பட்டது.
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைமை அலுவலகம் சார்பில் நேற்று வெளியிட்ட அறிக்கையில் பெண்களுக்கு அதிக இட ஒதுக்கீடு செய்துள்ளது திமுக என்று இருந்தது. அதற்கு வாரிசு அரசியலிலும் பெண்களை ஓரங்கட்டும் திமுகவுக்கு சமூக நீதி பற்றி பேச உரிமை இல்லை. மேலும் பெண்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கியவர் பிரதமர் நரேந்திர மோடி என்றார்.
பழனி முருகன் கோயிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மொபைல் கவுண்டர் மற்றும் காலணிகள் வைக்கும் இடத்தில் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து செல்போன், காலணிகளை வைத்தும், திரும்ப பெற்று ரோப் மற்றும் வின்ச் -ல் செல்லவும் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து மலைக்கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.
வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் கிராமத்தில் இன்று விருதுநகர் அதிமுக வேட்பாளர் விஜய பிரபாகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், எனது தந்தை விஜயகாந்த் மறைந்து நேற்றுடன் 100வது நாள் நிறைவடைந்த நிலையிலும், அவரது சமாதிக்கு அஞ்சலி கூட செலுத்தாமல் உங்கள் மத்தியில் வாக்கு சேகரிக்க வந்துள்ளதாக உருக்கமாக தெரிவித்தார். என் தந்தையை போல் மக்கள் சேவை ஆற்றுவேன் எனவும் உறுதியளித்தார்.
திண்டுக்கல் மதுவிலக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தரபாண்டியன், இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, சப்- இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், போலீசார் பிரதீபன், தங்கப்பாண்டி, ஜோசப் மெரின் , மணிகண்டன் திண்டுக்கல், நிலக்கோட்டை, மைக்கேல் பாளையம், கோபால்பட்டி, அய்யலூர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சட்ட விரோதமாக மது விற்ற 6 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 55 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
சாணார்பட்டி தேத்தாம்பட்டியை சேர்ந்தவர் நந்தீஸ்வரன் (21). இவர் கடந்த 1 வருடத்திற்கு முன்பாக 17 வயது சிறுமியை கடத்திச் சென்றதாக சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீசார் நந்தீஸ்வரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு மீதான விசாரணை திண்டுக்கல் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நந்தீஸ்வரன் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபணம் செய்யப்படாததால் அவரை விடுதலை செய்தனர்.
சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிலை கண்காணிப்பு குழுவினரின் ஜீப் இன்று புலிவலம் அருகில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த டிராக்டர் தேர்தல் அதிகாரி வந்த ஜீப் மீது மோதியது. இதில் டிரைவர் ஒருவருக்கு மட்டும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து சோளிங்கர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து டிராக்டர் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி பங்களாமேடு பகுதியில் நாளை மறுநாள் (9.4.2024) முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வி.டி.நாராயணசாமியை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார், மாவட்ட செயலாளர்கள் முருக்கோடை ராமர், ஜக்கையன் ஆகியோர் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.