Tamilnadu

News April 8, 2024

திருவாரூரில் ராஜ்நாத் சிங் பிரச்சாரம்

image

பாஜக சார்பில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எஸ்.ஜி.எம்.ரமேஷை ஆதரித்து திருவாரூர் தெற்கு வீதியில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பொதுமக்களிடையே பேசினார். இக்கூட்டத்தில் கூட்டணி கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

News April 8, 2024

மதுரையில் கடும் வெயில்

image

மதுரையில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டு வருகின்றது. இந்நிலையில், மதுரையில் சில நாட்காகவே 103 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவில் வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. இதனால், பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. மேலும், வெப்பசலனம் காரணமாக அடுத்த 6 நாட்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 8, 2024

மயிலாடுதுறையில் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை

image

மயிலாடுதுறையில் சிறுத்தையை கண்டறிய கோவை WWF- India நிபுணர் குழு 30 கேமரா ட்ராப்புகளுடன் களமிறங்கியது. சிறுத்தை நடமாட்டத்தை விஞ்ஞானப்பூர்வமாக கண்டறிய களப்பணியாளர்களுடன் கூட்டாக பணிகள் தீவிரமடைந்துள்ளது. நண்டலாறு – வீரசோழன் ஆறு பகுதிகளில் சிறுத்தை நடமாட்டத்தை குறைக்க வனத்துறை தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது.

News April 8, 2024

திருச்சியில் கொளுத்தும் வெயில்..

image

திருச்சியில் வெப்பம் 40.7டிகிரி செல்சியஸை தொட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்காத நிலையில், கோடையின் கடுமையான வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிகளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும், வரும் நாட்களில் 2 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

News April 8, 2024

சென்னை: வரி வசூலில் புதிய சாதனை

image

சென்னையில், 2023-2024 ஆம் நிதியாண்டிற்கான சொத்து மற்றும் தொழில் வரியாக ரூ.2,218 கோடியை சென்னை மாநகராட்சி வெற்றிகரமாக வசூலித்துள்ளது. இந்தத் தொகை கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு மற்றும் வசூல் ஆகிய இரண்டையும் மிஞ்சியுள்ளது. வரி வசூல் செய்யப்பட்ட இடங்களில் தேனாம்பேட்டையில் அதிக வசூல் செய்யப்பட்டுள்ளது.

News April 8, 2024

காஞ்சிபுரம் அருகே தீ விபத்து

image

குன்றத்தூர் அடுத்த சோமங்கலம் கிராமம் மேட்டூர் அண்ணா நகரில் எஸ் பி பில்டர்ஸ் என்ற பெயரில் புன்னாராவ் என்பவருக்கு சொந்தமான தார் பிளான்ட் இயங்கி வருகிறது. இந்த தார் பிளான்டில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் தார் பிளாண்ட் முழுவதும் தீ மளமளவென பரவி கரும்புகைகள் எழும்பியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சோமங்கலம் போலீசார் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

News April 8, 2024

தி.மலை: முன்னாள் எம்எல்ஏ காலமானார்

image

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் தொகுதி அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.கே.எஸ்.அன்பழகன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவரது உடலுக்கு அதிமுக முக்கிய தலைவர்கள், அரசியல் கட்சியினர் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவர் எம்ஜிஆர் மன்ற இணை செயலாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News April 8, 2024

ட்ரோன்கள் பறக்க காவல்துறை தடை

image

கோவை: காரமடை தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் பிரதமர் மோடி வரும் 10ஆம் தேதி கோவை, திருப்பூர், நீலகிரி, பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதுகுறித்து எஸ்.பி பத்ரி நாராயணன் விடுத்துள்ள அறிக்கையில், தென்திருப்பதி நால்ரோட்டை சுற்றி 5 கி.மீ சுற்றளவிற்கு பிரதமர் வரும் வழித்தடத்தில் வரும் 9, 10ஆம் தேதியில் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

News April 8, 2024

புதுச்சேரியில் பசுமை ஓட்டுச்சாவடி

image

புதுச்சேரியில் முழுக்க முழுக்க ஒரு ஓட்டுச்சாவடி பசுமை ஓட்டுச்சாவடியாக செயல்பட உள்ளது. இந்த பசுமை ஓட்டுச்சாவடி புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள 138 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹெரிட்டேஜ் கட்டிடமான வ.உ.சி., அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட உள்ளது. ஓட்டுச்சாவடி வாயிலில் வாழை மரங்கள், இளநீர் கட்டப்பட்டு, பச்சை மா, தென்னங்கீற்று பந்தல், தோரணங்கள் கட்டப்படுகிறது.

News April 8, 2024

பஜ்ஜி சுட்டுக்கொடுத்த அ.தி.மு.க. வேட்பாளர் 

image

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி.பாபு கும்பகோணம் மேற்கு ஒன்றியம் பகுதியில் நேற்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது கடை வீதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர் அங்குள்ள ஓட்டல் ஒன்றில் வேட்பாளர் பி.பாபு தானே பஜ்ஜி சுட்டுக்கொடுத்து கடைக்கு வந்த வாடிக்கையாளர்களிடம் வாக்கு சேகரித்தார். 

error: Content is protected !!