Tamilnadu

News April 9, 2024

கொலை முயற்சி வழக்கில் 7 பேருக்கு 10 ஆண்டு சிறை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2018ம் ஆண்டு காதலர்களை பிரிக்கும் நோக்கில், காதலனை, குமரி கடற்கரை பகுதிக்கு சமாதானம் பேச வரவழைத்த காதலி வீட்டை சேர்ந்தவர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் 7 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நாகர்கோவில் 2வது கூடுதல் சார்பு நீதிமன்ற நீதிபதி ஹஷன் தீர்ப்பளித்துள்ளார்.

News April 9, 2024

ஈரோட்டில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து ரம்ஜான் மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை (ஏப்.10) முதல் 5 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன்படி ஈரோட்டில் இருந்து கோவை, திருச்சி, மதுரை, சென்னை, திருச்செந்தூர், இராமேஸ்வரம், திருவண்ணாமலை, பழனி போன்ற ஊர்களுக்கு கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என ஈரோடு மண்டல பொதுமேலாளர் சொர்ணலதா தெரிவித்துள்ளார்.

News April 9, 2024

சென்னை: 25க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை!

image

சென்னையில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. போதைப்பொருள் கடத்தில் வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தோம் ஜாபர் சாதிக் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. மேலும், தி.நகர், வண்ணாரப்பேட்டை, மயிலாப்பூர், மாதவரம், அயனாவரம் என ஜாபர் சாதிக்கிற்கு தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

News April 9, 2024

பொள்ளாச்சி அருகே ரூ.32 கோடி பறிமுதல்?

image

பொள்ளாச்சி அருகே பிரபல கோழிப்பண்ணை அலுவலகத்தில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், அங்கு கணக்கில் வராத 32 கோடி ரூபாயை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆவணங்களையும் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது. விடிய விடிய நடந்த சோதனையில் கோடி கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

News April 9, 2024

பெரம்பலூர்: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பேரணி

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சத்திரமனை கிராம பொதுமக்களிடையே 100% வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், நேற்று(ஏப்.8ம் தேதி) மாலை 4 மணி அளவில் மகளிர் சுய உதவி குழுவினரின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

News April 9, 2024

பட்டுக்கோட்டை: நாடியம்மனுக்கு பதுமைகள் வரகரிசி மாலை

image

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் காப்பு கட்டுதலுடன் பங்குனி திருவிழா நடந்து வருகிறது. தினந்தோறும் நாடியம்மன் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் காலையும், மாலையும் வீதி வலம் வந்தது. அந்த வகையில் நேற்று(ஏப்,8) அதிகாலை 4.30 மணி அளவில் செட்டியார் தெருவை அடைந்த நாடியம்மனுக்கு பதுமைகள் வரகரிசி மாலை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.

News April 9, 2024

காஞ்சி: சோமவார அமாவாசையை ஒட்டி நாக வழிபாடு

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மேற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள, அருள்மிகு ஸ்ரீ கச்சபேஸ்வரர் கோயிலில் உள்ள ஆலமர நாகரை சோமவார அமாவாசை ஒட்டி நேற்று(ஏப்.8) மாலை ஏராளமான பெண்கள் ஒன்று கூடி வழிபட்டனர். தோஷம் நீங்கவும், குடும்ப நலன் வேண்டியும் நாக தேவதைக்கு அபிஷேகம் செய்து 108 முறை வலம் வந்து சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

News April 9, 2024

வேலூர்: 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை

image

வேலூர் மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு நாளை (ஏப்ரல் 10) பிரதமர் நரேந்திர மோடி வருகை தர இருக்கிறார். இதனால் வேலூர் மாநகராட்சி பகுதிகள் முழுவதையும் இன்றும், நாளையும் (ஏப்.9, 10) “ட்ரோன்கள் மற்றும் ராட்சத பலூன்கள்” பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக (No Flying Zone) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

News April 9, 2024

அமாவாசையை முன்னிட்டு சிறப்பு மகா யாகம்

image

நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள காருக்குடி ஸ்ரீ மகா மாரியம்மன் & நாகம்மன் கோயிலில் அம்மாவாசை முன்னிட்டு சிறப்பு யாகம் நேற்றிரவு நடைபெற்றது. இக்கோயிலில் உள்ள சுமார் 7 அடி உயரம் உடைய மதுரை வீரன் சிலை முன்பாக யாக குண்டம் அமைக்கப்பட்டு யாகம் பூஜையும் பின்னர் மகா பூர்ணாஹூதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சிறப்பு மகா தீபராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருட்பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

News April 9, 2024

“லிப்ட்” தருவதாக கூறி ஹெல்மெட்டால் தாக்குதல்

image

சமாதானபுரத்தைச் சேர்ந்தவர்கள் ஹரி கிருஷ்ணன்(21). இவர் வீரப்பன் காலனி அருகே சென்றபோது மனோஜ் (27) , திருமலை கொழுந்துபுரம் மகாராஜா (20) ஆகியோர் தங்களது இருசக்கர வாகனத்தில் லிப்ட் தருவதாக ஏற்றி மாற்று பாதையில் அழைத்துச் சென்றனர். இதை தட்டி கேட்ட அரிகிருஷ்ணனை இருவரும் ஹெல்மெட்டால் சரமாரி தாக்கினர். இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிந்து மனோஜ், மகாராஜாவை இன்று (ஏப்ரல் 8) கைது செய்தனர்.

error: Content is protected !!