Tamilnadu

News April 9, 2024

ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக ம.பி முதல்வர் பிரச்சாரம்

image

ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் நாளை ராமநாதபுரத்தில் பிரச்சாரம் செய்கிறார். இதற்காக நாளை(ஏப்.10) காலை மதுரை வரும் அவர் மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு பிற்பகலில் ராமநாதபுரம் வந்து ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார்.

News April 9, 2024

தஞ்சை: பறக்க விடப்பட்ட விழிப்புணர்வு பலூன்

image

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் 100 % நேர்மையாக வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த ராட்சத விழிப்புணர்வு பலூன் இன்று பறக்க விடப்பட்டது. இதனை தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் பறக்க விட்டார். இந்நிகழ்ச்சிகள் பயிற்சி கலெக்டர் விஷ்ணு பிரியா, செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி மதியழகன் மற்றும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

News April 9, 2024

பல்லடத்தில் நான்கு பேர் வெட்டி கொலை 15 ஆம் தேதி தீர்ப்பு

image

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கடந்த செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதி கள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் அவரது உறவினர்கள் நான்கு பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஐந்து பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை முடிந்தது. வருகின்ற 15ஆம் தேதி திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகும் என இன்று அறிவிக்கப்பட்டது.

News April 9, 2024

திருச்சியில் ரூ.3 கோடிக்கு மேல் பணம் பிடிப்பு.!

image

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் கடந்த 6ம் தேதி ரூ.50 லட்சமும், கடந்த 7ம் தேதி ரூ.1கோடியே 50 லட்சமும், திருச்சி மேற்கு தொகுதியில் ரூ.1,29,09,850 வருமான வரித்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதுவரை திருச்சியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் ரூ.3 கோடிக்கு மேல் பிடிபட்டிருப்பதாகவும்,
இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் திருச்சி மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

News April 9, 2024

எடப்பாடியில் அமைச்சர் தேர்தல் பரப்புரை

image

சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதி ஆதரித்து எடப்பாடியில் இன்று
உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார் .அப்போது
இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு ரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்; மனு நீதி பேசும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது பா.ம.க. 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு எதையும் செய்யவில்லை’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் பேசினார்.

News April 9, 2024

மயிலாடுதுறையில் வனத்துறை தகவல்

image

மயிலாடுதுறையில் வனத்துறை சார்பில் இன்று சிறுத்தை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கருப்பூர் அருகே நண்டலாற்றின் அருகில்
சிறுத்தையின் எச்சம் புதியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் , இதன் மூலம் சிறுத்தையின் நடமாட்டம் எவ்வாறு உள்ளது என்பதனை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து வரைபடங்கள் மூலம் ஆய்வுகள் மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 9, 2024

திருச்சி அருகே தீப்பெட்டிகள் எரிந்து நாசம்

image

சிவகாசியிலிருந்து நேற்று இரவு தீப்பெட்டி பண்டல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை திருச்சி- துவரங்குறிச்சி அருகே வந்தபோது, லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதில் சுமார் 5 லட்சம் மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்களில் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. தகவலின் பேரில் துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.

News April 9, 2024

தர்மபுரியில் பூண்டு விலை அதிகரிப்பு

image

தர்மபுரி நான்கு ரோட்டில் அமைந்துள்ள உழவர் சந்தையில் கடந்த சில நாட்களாக பூண்டு வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ பூண்டு ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை நிலவரப்படி ஒரு கிலோ பூண்டு ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

News April 9, 2024

கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 100% வாக்களிக்க வேண்டும் என்பதற்காக (SVEEP-Systematic Voters Education and Electoral Participation) பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காஞ்சிபுரம் பச்சையப்பன் பெண்கள் கல்லூரியில் மாணவியர்கள் கோலங்கள் வரைந்து தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

News April 9, 2024

உதகை அரசு பூங்கா பராமரிப்பு பணிகள் 

image

உதகையில் மே மாதம் சீசனை முன்னிட்டு அரசு தாவரவியல் பூங்காவில் பராமரிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன. பூங்காவில் 14 ஏக்கர் அழகிய பசுமையான புல் வெளிகளில் மண் கொட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது சிடிசி குளத்தை சுற்றிலும் பணிகள் நடைபெறுகின்றன. ஒரு வாரத்தில் பணிகள் முடிவடையும் . தினமும் ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது .

error: Content is protected !!