Tamilnadu

News April 10, 2024

சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 25 கேமராக்கள்

image

தஞ்சாவூர் மாவட்ட எல்லையிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள காஞ்சிவாய் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததாக கூறப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்ட எல்லையான எஸ். புதூரிலிருந்து காஞ்சிவாய் வரையிலான பகுதியில் 25 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சிறுத்தை குறித்து அச்சுறுத்தும் வகையில் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

News April 10, 2024

திருப்பூரில் ரம்ஜான் பண்டிகை: சிறப்பு தொழுகை

image

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாத நடைபெற்று வருவதை முன்னிட்டு நேற்று இரவு பிறை தெரிந்ததாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு மற்றும் ஜாக் அமைப்பினர் இன்று ரம்ஜான் பண்டிகை என அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் திருப்பூர் நொய்யல் வீதியில் உள்ள மைதானத்தில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

News April 10, 2024

ரயில் பயணிகளின் கவனத்திற்கு

image

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, சென்னை சென்டிரல்- கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர்பேட்டை இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் நாளை(11.04.24) ஞாயிறு கால அட்டவணையின்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், பயணிகள் முன்பதிவு மையங்கள் ஞாயிறு கால அட்டவணைப்படி (காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை) பகுதி நேரம் மட்டுமே செயல்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

News April 10, 2024

வேட்பாளர்கள் சின்னம் பொருத்தும் பணி

image

பாராளுமன்றத் தேர்தல் 2024 ஐ முன்னிட்டு திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தும் பணி திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் முன்னிலையில் திண்டுக்கல் மேற்கு தாசில்தார் வில்சன் மேற்பார்வையில் நடைபெற்றது. இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.

News April 10, 2024

ஈரோடு : தேர்தல் புறக்கணிப்பு பேனரால் பரபரப்பு

image

ஈரோடு அருகே சூரம்பட்ட, திரு.வி.க. வீதியில் டாஸ்மாக் கடை (கடை எண் : 3561) உள்ளது. இந்நிலையில் இந்த டாஸ்மாக் கடையை கண்டித்தும், டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தியும் அப்பகுதியினர் அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே இதனை கண்டித்து வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அப்பகுதியில் மக்கள் பேனர் வைத்துள்ளனர்.

News April 10, 2024

காஸ் சிலிண்டரில் தேர்தல் விழிப்புணர்வு

image

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிப்போம், நியாயமாக வாக்களிப்போம் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து சிலிண்டர்களில் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி இன்று (ஏப்.10) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் துவக்கி வைத்தார்.

News April 10, 2024

தூத்துக்குடியில் இருவருக்கு கத்திக் குத்து 

image

தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்த ஜான் கிஷோர் (35) ,ஜோன்ஸ் (24)  ஆகிய இருவரும் அப்பகுதியில் நின்று கொண்டிருந்தபோது ஒரே பைக்கில் 3 பேர் அதி வேகமாக சென்றுள்ளனர். இதனை 2 பேரும் கண்டித்துள்ளனர். இதையடுத்து பைக்கில் வந்த 3 பேரும் சேர்ந்து ஜான் கிஷோர், ஜோன்ஸ் ஆகிய 2 பேரை நேற்று கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 10, 2024

ரூ.70 ஆயிரம் மதிப்பிலான பட்டு நூல் கொண்டு விழிப்புணர்வு

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற பொதுத் தேர்தலையொட்டி 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஆரணி பட்டு கைத்தறி நெசவாளர்கள் மூலம் ரூ.70 ஆயிரம் மதிப்பிலான பட்டு நூல் கொண்டு தேர்தல் விழிப்புணர்வு வாசகம் நெய்யப்பட்ட புடவையை மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் இன்று (ஏப்.10) வெளியிட்டார்.

News April 10, 2024

திருச்சி: கிரிகெட் அணிக்கு வீரர்கள் தேர்வு

image

திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையில் 19 வயதினருக்கான, கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான திருச்சி மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் தேர்வு வரும் ஏப்.,21 அன்று சாரநாதன் பொறியியல் கல்லூரியில் காலை 6 :30 மணிக்கு நடைபெறுகிறது. மேலும், தகவலுக்கு 7010757073 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 10, 2024

திண்டுக்கல் அருகே பெண்கள் ஆர்ப்பாட்டம்

image

திண்டுக்கல் பைபாஸ் பகுதியில் உள்ள தரகு மண்டி வர்த்தக சங்க வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் வெங்காய பேட்டையில் இன்று சுமார் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இங்கு 30 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வரும் நிலையில் தரம் பிரித்தல் வேலைக்கு வரவேண்டாம் என்று நிர்வாகிகள் கூறியதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!