India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர், திருத்துறைப்பூண்டி 20-வது வார்டில் இன்று (10.4.2024) நாகை நாடாளுமன்ற வேட்பாளர் சுர்ஜித் சிங் சங்கரை ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் திருத்துறைப்பூண்டி நகர கழக செயலாளர் டிஜி சண்முகசுந்தரம் தலைமையில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தனர். இதில் அதிமுக நகர பொறுப்பாளர்கள் வார்டு பொறுப்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவை வழியுறுத்தி, நாமக்கல் பூங்கா சாலையில் நாமக்கல் மாவட்டம் நிர்வாகத்தின் வழிகாட்டுதல் படி, தேர்தல் நடத்தும் அலுவலர் உமா தலைமையில் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டு வரும் பாராளுமன்ற தேர்தலில் 100% அனைவரும் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்திய விவசாயிகள் சங்க தலைவர் குருசாமி, ஓய்வு பெற்ற வேளாண்மை துறை கூடுதல் இயக்குனர் பொன்னுச்சாமி மற்றும் விவசாய பிரதிநிதிகள் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் விவசாயத்தை நீர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்தோடு இணைத்து லாபகரமாக்கி வெற்றி கண்ட வேப்பங்குளம் மாடலை இந்தியா முழுவதும் விரிவுபடுத்த அனைத்து வேட்பாளர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தனர்.
கடலூர் தாலுகா அலுவலகத்தில் கடலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 227 வாக்குச்சாவடி மையங்களுக்கு 584 வாக்குச்சாவடி இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதனைத் தொடர்ந்து இன்று முதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருக்கும் கடலூர் தாலுகா அலுவலகத்தில் 8 பேர் கொண்ட துணை ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்திய படி பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட உள்ளனர்.
நெல்லையில் வரும் 12ஆம் தேதி காங்கிரஸ் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ராபர்ட் புரூஸுக்கு பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதன் காரணமாக நெல்லை மாநகர் முழுவதும் நாளை காலை 6 மணி முதல் 13ஆம் தேதி காலை 6 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி இன்று (ஏப்.10) உத்தரவிட்டுள்ளார்.
நாகர்கோவில் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலன் மகன் டாக்டர் ரவீந்திரன் மற்றும் மருமகள் டாக்டர் ரமணி ஆகியோர் நேற்று (ஏப்.9) கயத்தாறு அருகே நடந்த வாகன விபத்தில் மரணம் அடைந்தனர். இவர்களின் மறைவிற்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (ஏப்.10) வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர்களை பிரிந்து வாழும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
திமுக வேட்பாளா் ஜெகத்ரட்சகனுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினா், நகர காங்கிரஸ் தலைவா் பாா்த்தசாரதி தலைமையில் அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் சேர்ந்த மற்றொரு பிரிவினர் 15க்கும் மேற்பட்டோர் பார்த்தசாரதி, விமல் உள்ளிட்ட பலரை உருட்டு கட்டையால் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அரக்கோணம் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
ரம்ஜான் பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்டம் சார்பில், 200 சிறப்பு பேருந்துகள் இன்று முதல்
ஏப்ரல் 15ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளதாக அதன் நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார். அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு மையம், இணையதளம் மற்றும் செயலி மூலம் பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட நக்கசேலம் பகுதியில் (ஏப்ரல் 9) நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி உத்தரவின் பேரில், மத்திய துணை காவல் படையினர் மாவட்ட காவலர்களுடன் இணைந்து கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தினர்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று திடீரென பெண் ஒருவர் முகத்தை துப்பட்டாவால் மூடிக் கொண்டு எனக்கு நீதி வேண்டும் என கூறி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் பெண்ணிடம் கேட்டதற்கு கலெக்டர் நேரில் என்னிடம் வந்து கேட்டால் தான் கூறுவேன் என அடம்பிடித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.