Tamilnadu

News April 11, 2024

மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில் பலத்த பாதுகாப்பு

image

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மதுரைக்கு வருகை தருகிறார். பிற்பகலில் வரும் அவர் இரவு 7.30 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். இதையொட்டி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், கோவில் வளாகம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்களின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

News April 11, 2024

கள்ளக்குறிச்சி: ரூ.9.17 லட்சம் பஞ்சு கொள்முதல்

image

கள்ளக்குறிச்சி வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி வார சந்தை நடைபெற்றது. எல்.ஆர்.ஏ. ரக பஞ்சு 390 மூட்டைகள் விற்பனைக்கு எடுத்து வரப்பட்டன. எல்.ஆர்.ஏ. ரகம் குறைந்தபட்சம் ரூ.6,700க்கும், அதிகபட்சம் ரூ.7,780க்கும் விலை போனது. மேலும், 92 விவசாயிகள் கொண்டுவந்த 390 பஞ்சு மூட்டைகள், ரூ.9.17 லட்சத்துக்கு கொள்முதல் செய்யப்பட்டது.

News April 11, 2024

8 லட்சம் மதிப்பிலான ஜவுளி பொருட்கள் பறிமுதல்

image

கடலூர் ஆள்பேட்டை பகுதியில் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி ஆனந்தி தலைமையில் போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சரக்கு வாகனம் ஒன்றில் உரிய ஆவணம் இன்றி ரூ. 8 லட்சம் மதிப்பிலான ஜவுளி பொருட்கள் எடுத்துச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் கடலூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்த பொருட்களை வருவாய் கோட்டாட்சியர் அபிநயா பார்வையிட்டார்.

News April 11, 2024

அரியலூர்: மக்களை வியப்பில் ஆழ்த்திய பேரணி

image

ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வினை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட வாகன விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இப்பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது .

News April 11, 2024

சென்னையில் ரூம் போட்டு செயின் பறிக்கும் கும்பல்

image

பெரம்பூர் பகுதியில் தலைமை காவலர் மனைவி உட்பட இருவரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் அரியானாவை சேர்ந்த சச்சின் குமார் 24, அங்கீத்24 அங்கீத் யாதவ் 26, ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணையில் மூன்று பேரும் சுற்றுலா செல்வதாக சென்னை வந்து இரு பைக்குகளை வாடகைக்கு எடுத்து நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

News April 11, 2024

தருமபுரி அருகே குடியிருப்பில் புகுந்த பாம்பு

image

தருமபுரி வட்டம், கிருஷ்ண நகர் அடுத்த A. கொள்ளஹள்ளி பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்பவரின் வீட்டில் ஏப்ரல் 11ம் தேதி பாம்பு ஒன்று புகுந்ததா தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் போ பா வெங்கடேஷ் தலைமையிலான குழு பாம்பு பிடிக்கும் கருவியை பயன்படுத்தி பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

News April 11, 2024

தி.மலை: பரோட்டா போட்ட வேட்பாளர்

image

போளூர் நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட ஆரணி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், ஓட்டல் கடை ஒன்றில் பரோட்டா போட்டு வாக்குச் சேகரித்தார். அப்பொழுது, திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவர் கம்பன், திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் உடனிருந்தனர்.

News April 11, 2024

ஈரோடு: லாரி கவிழ்ந்து விபத்து

image

சத்தியமங்கலம் உக்கிரன் பகுதியில் விவசாயத் தோட்டத்தில் இருந்து குச்சி கிழங்குகளோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சேலம் மாவட்டம் மல்லூருக்கு சென்றது.  அத்தியப்ப கவுண்டன் புதூர் பிரிவு அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. லாரியின் பயணித்த 7 பேரும் காயங்களுடன் உயிர் தப்பினர். 

News April 11, 2024

ராணிப்பேட்டை: ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை

image

வாலாஜா, அம்மூர் கூட்ரோடு நேதாஜி தெருவைச் சேர்ந்தவ சுரேஷ் என்பவரின் மனைவி அனிதா (36). இவர் நேற்று மாலை வாலாஜா ரோடு பகுதியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். காட்பாடி ரயில்வே போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 11, 2024

சேலம் அருகே பனை மரங்கள் தீ வைத்து எரிப்பு

image

சேலம் மகுடஞ்சாவடி அருகே உள்ள அழகப்பம்பாளையம் பகுதியில் நீர்நிலைகளில் அருகாமையில் இருந்த 50க்கும் மேற்பட்ட பனை மரங்கள் நேற்று (ஏப்ரல் 10) இரவு சமூக விரோதிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டது. பனை மரங்களை எரித்தவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!