India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. எஸ்.பி சமய்சிங் மீனா உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் கவிதா தலைமையிலான போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது போலீசார் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் வாக்கு பதிவு நாள் (ஏப்ரல் 19) மற்றும் வாக்கு பதிவிற்கு முன் நாள் ஆகிய இரண்டு நாட்களில் அச்சு ஊடகங்களில் தேர்தல் சம்பந்தமான விளம்பரங்களை மாவட்ட ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழுவிடம் முறையான முன் அனுமதி பெற்ற பின்னரே வெளியிட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சுப்புலெட்சுமி இன்று தெரிவித்துள்ளார்.
திருவேற்காடு நகராட்சியில் ஓட்டுனராக பணியாற்றி வருபவர் அரி. இவரது ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டதாக கூறி நேற்று மாலை நகராட்சி கமிஷனர் ஜகாங்கீர் பாஷாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அரி நகராட்சி அலுவலகத்தின் மொட்டை மாடியில் சென்று தீக்குளிக்க முயன்றார். உடனே சக ஊழியர்கள் அவரை அங்கிருந்து மீட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தமிழ் புத்தாண்டையொட்டி கிருஷ்ணன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருடன் தர்மர் எம்பி, மாநில பாஜக செயற்குழு உறுப்பினர் GPS. நாகேந்திரன், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தளி அருகே உள்ள சூளகுண்டா கிராமத்தை சேர்ந்த நாராயணப்பா(65) என்பவர் நேற்று மாலை விவசாய நிலத்திற்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் இன்று காலை தேடிச்சென்ற போது அவரை காட்டு யானை மிதித்து இறந்துள்ளது தெரியவந்தது. இதனால் கிராம மக்கள் கொந்தளித்துள்ளனர். கடந்த சில நாட்களாக இந்த யானை சுற்றி வந்த நிலையில் வனத்துறையினர் கண்டுக்கொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது.
மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படும்.
அதன்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதியான கூத்தங்குழி உவரி, கூட்டபனை , பெருமணல், பஞ்சல், கூடங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள மீனவர்கள் நாளை முதல் 61 நாட்களுக்கு ( ஏப். 15 ) கடலுக்கு செல்ல மாட்டார்கள். எனவே மீன்களின் விலையும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், சென்னை காசிமேடு மீன் சந்தையில் மக்கள் ஆர்வமுடன் மீன்களை வாங்க குவிந்தனர். ஞாயிறு விடுமுறை தினமான இன்று அதிகாலை முதல் பல்வேறு வகையான மீன்கள் விற்கப்பட்டது. மேலும் மீன்பிடி தடைகாலம் வரவுள்ளது என்பதால் மீன் விலை தற்போது உயர்ந்துள்ளது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று காலை 9.30 மணியளவில் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள பிரசித்தி பெற்ற சாலை கெங்கை அம்மன் கோவில் நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் சார்பில் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 19 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் , ஆண்கள் , பெண்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர் அம்மன் அருளை பெற்றனர்.
இந்திய அரசியல் சாசன மேதை அம்பேத்கரின் 134 வது பிறந்த நாளையொட்டி மத்திய, மாநில எஸ்சி, எஸ்டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் ராமநாதபுரத்தில்
அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து இன்று மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் கர்ணன், மாவட்ட செயலர் சேக்கிழார், மாநில துணை தலைவர் பாலச்சந்திரன், மாநில கொள்கை பரப்பு செயலர் மரியம் ஜேம்ஸ், மதிமுக துணைத்தலைவர் மல்லை சத்யா உள்பட பலர் பங்கேற்றனர்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் இன்று தமிழர் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி பொங்கும் வகையில் தங்கள் வாழ்வில் எண்ணற்ற வெற்றிகளை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ அனைவருக்கும் இனிய தமிழர் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.