India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென் சென்னை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெயவர்தன் இன்று காலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அவர் மெரினா கடற்கரையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு அளிக்குமாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
தஞ்சை பெரியகோவிலில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு வருகிற 20-ந் தேதி (சனிக்கிழமை) ஒரு நாள் மட்டும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவல கங்களுக்கும் , கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை வாரச்சந்தை தேதி மாற்றம் செய்யப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 19-04-2024 வெள்ளிக்கிழமை அன்று
தமிழகத்தில் மக்களவை பொது தேர்தல் நடைபெறுவதை
முன்னிட்டு புதுக்கோட்டை நகராட்சி வாரச்சந்தை, ஆட்டு
சந்தை, பசு மாடு சந்தை, காய்கறி, மீன் சந்தை
18-04-2024 வியாழக்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ள ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டு அட்டை, வருமான வரி நிரந்தர கணக்கு அட்டை உள்ளிட்டு ஆவணங்களை பயன்படுத்தி வாக்காளர்கள் வாக்களிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 19-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் அதிமுக சார்பில் நேற்று பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக மாவட்ட செயலாளரும், நன்னிலம் எம்எல்ஏ ஆர்.காமராஜ் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். ஏப்ரல் 17ஆம் தேதியுடன் வாக்கு சேகரிப்பு நிறைவடைய உள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் ஊராட்சியில் அதிமுக கூட்டணியில், தேமுதிக சார்பில் திருவள்ளூர் மக்களவை தேமுதிக வேட்பாளராக போட்டியிடும் கு நல்லதம்பியை ஆதரித்து முரசு சின்னத்திற்கு நேற்று கூட்டணி கட்சியினர் பேண்ட் வாத்தியங்கள் முழங்க வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர். அப்போது போண்டா சுட்டும், தேநீர் போட்டும் முரசு சின்னத்திற்கு
வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தனர்.
தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சில இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சில இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி உள்ளிட்ட சில மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சில இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சில இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.