Tamilnadu

News April 17, 2024

திமுக மாவட்ட செயலாளர் இறுதி கட்ட பரப்புரை

image

கல்லாவி பேருந்து நிலையம் அருகே கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் பேரணி சென்று கடை வியாபாரிகளிடம் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடம் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்துக்கு ‘கை’ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். உடன் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டார்கள். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

News April 17, 2024

விடுதியில் தாய், குழந்தை தற்கொலை

image

ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள தனியார் விடுதியில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கோகிலவாணி (25) மற்றும் அவரது 3 வயது மகள் கடந்த 13 ஆம் தேதி தங்கியுள்ளனர்.  2 நாட்களாகியும் அறையில் இருந்து வெளியே வராததால் விடுதியாளர் பவானி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின் அறையின் கதவை உடைத்து பார்த்த போது கோகிலவாணி மற்றும் குழந்தை தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 17, 2024

கடலூர்:225 வாகனங்களில் போலீசார் அனுப்பி வைப்பு

image

கடலூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக காவல்துறையினர் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி இன்று கடலூர், மஞ்சக்குப்பம் மைதானத்தில், கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் 225 வாகனங்களில் சுமார் 3,800 போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர்.

News April 17, 2024

நாயை ஏவி கடிக்க வைத்த 2 பேர் கைது

image

கெம்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(34). இவரது வீட்டின் அருகே ஜோஸ்வா ஜோசப் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது கடை முன் இருந்த குப்பையை மணிகண்டன் அகற்றக் கூறியதால் ஆத்திரமடைந்த ஜோஸ்வா ஜோசப் வீட்டில் வளர்க்கும் நாயை ஏவி மணிகண்டனை கடிக்க வைத்துள்ளார். இதில், காயமடைந்த மணிகண்டன் அளித்த புகாரில் ஜோஸ்வா ஜோசப் மற்றும் அவரது தந்தை தேவராஜை போலீசார் கைது செய்தனர்.

News April 17, 2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுபான உரிமம் தளங்கள் மகாவீரர் ஜெயந்தி தினமான வருகின்ற 21ஆம் தேதி மற்றும் மே தினமான மே 1 ஆகிய இரு தினங்களில் தற்காலிகமாக மூட உள்ளது. மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் மதுபான கடைகளின் உரிமைதாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று எச்சரித்துள்ளார்.

News April 17, 2024

திருச்சி அருகே விபத்து; 5 பேரின் நிலை?

image

எடப்பாடியிலிருந்து கும்பகோணம் நோக்கி நேற்று காலை அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.திருச்சி திருவானைக்காவல் அருகே பஸ் சென்றபோது தூத்துக்குடியில் இருந்து ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவுக்கு உரம் முட்டைகளை ஏற்றி சென்ற லாரி திடீரென மோதியது.இதில் பஸ்ஸில் பயணம் செய்த 5 பேர் காயமடைந்தனர்.அவர்களை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்

News April 17, 2024

தஞ்சாவூர் அருகே விபத்து: 2 பேர் உயிரிழப்பு

image

தஞ்சையைச் சேர்ந்தவர் கிருபா பொன்.பாண்டியன். இவர் காரில் திருச்சிக்கு சென்று விட்டு நேற்று காலை தஞ்சை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது வல்லம் அருகே வரும் போது கட்டுப்பாடை இழந்த கார், மினி லாரி மீது மோதி விபத்து ஏற்ப்பட்டது. இதில் கிருபா பொன் பாண்டியன் சம்பவயிடத்திலேயும், மினி லாரி ஓட்டுநர் நெடுஞ்செழியன் மருத்துவமனையில் உயிரிழந்தனர். இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

News April 17, 2024

நாகை: உடனே வெளியேற மாவட்ட ஆட்சியர் உத்தரவு

image

நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரங்கள் அனைத்தும் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது.
எனவே தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி 6 மணிக்கு மேல் வேட்பாளர்கள் உள்ளிட்ட யாரும் எவ்வித பிரச்சாரத்திலும் ஈடுபட கூடாது என்றும் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத அனைவரும் நாகை மாவட்டத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் உத்தரவிட்டுள்ளார்

News April 17, 2024

வெளியாட்கள் தொகுதியில் இருந்து வெளியேற உத்தரவு

image

சேலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிய உள்ள நிலையில், தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் தொகுதியில் இருந்து வெளியேற மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார். மேலும் திருமண மண்டபங்கள், தனியார் தங்கும் விடுதிகள் போன்றவற்றிலும் வெளிநபர்கள் யாரையும் தங்க வைக்க கூடாது என்றும் தேர்தல் விதிமுறையை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.

News April 17, 2024

புதுச்சேரியில் 144 தடை உத்தரவு

image

வருகின்ற மக்களவைத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு புதுச்சேரியில் இன்று (ஏப்.17) மாலை 6 மணி முதல் 1 ஏப்.20 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார். மேலும் மதுபான கடைகளுக்கும் கலால் துறையினர் சீல் வைத்துள்ளனர்.

error: Content is protected !!