Tamilnadu

News April 17, 2024

சென்னை வெப்பநிலை விவரம்

image

தமிழகத்தின் நேற்றைய (ஏப்ரல்.16) வானிலை அறிக்கையைச் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் வெப்பநிலையை விட அதிகமாக இருந்தது, அதன்படி, சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 37.6 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 35.7 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது.

News April 17, 2024

ஈரோடு வெப்பநிலை விவரம்

image

தமிழகத்தின் நேற்றைய (ஏப்ரல்.16) வானிலை அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் வெப்பநிலையை விட அதிகமாக இருந்தது, அதன் படி, ஈரோட்டில் அதிகபட்ச வெப்பநிலையாக 40.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

News April 17, 2024

சேலம் வெப்பநிலை விவரம்

image

தமிழகத்தின் நேற்றைய (ஏப்ரல்.16) வானிலை அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் வெப்பநிலையை விட அதிகமாக இருந்தது, அதன் படி, சேலத்தில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

News April 17, 2024

திருப்போரூர்: அமைச்சர் வீதி வீதியாக வாக்கு சேகரிப்பு

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. அந்த வகையில், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் செல்வத்திற்கு ஆதரவாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் திருப்போரூர் பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்குகளை சேகரித்தார். உடன் திருப்போரூர் ஒன்றிய தலைவர் இதயவர்மன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

News April 17, 2024

பார்வை மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பது குறித்து பயிற்சி

image

அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் பிரெய்லி முறையில் வாக்களிப்பது எப்படி என்பது குறித்து, பிரெய்லி முறைகளில் பயிற்சி பெற்ற நபர்கள் மூலமாக பார்வையற்ற வாக்காளர்களுக்கு இன்று(17.4.2024) பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News April 17, 2024

வாக்குப்பதிவிற்கு தயார் – ஆட்சியர்

image

வேலூர் மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவிற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர், தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். பதட்டமான வாக்குச் சாவடிகளை கண்காணிக்க 260 நுண் பார்வையாளர்கள் நியமனம் செய்துள்ளதாக தெரிவித்தார்.

News April 17, 2024

உதயநிதி ஸ்டாலின் பரப்புரை

image

நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இறுதி கட்ட பரப்புரை இன்று நடைபெற்று வரக்கூடிய நிலையில் ,கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடக்கூடிய திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் சட்டப்பேரவை தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் இன்று இறுதி கட்ட பரப்புரையில் ஈடுபட்டார்.

News April 17, 2024

சரிந்த மரக்கிளையால் மின்தடை

image

சமாதானபுரம் உப மின் நிலைய பகுதி வி எம் சத்திரம் அலுவலகத்திற்கு உட்பட்ட நெல்லை தூத்துக்குடி சாலையில் உள்ள மின் கம்பம் அருகே இன்று (ஏப்ரல் 17) காலை மரக்கிளைகள் மின் கம்பிகள் மீது சரிந்து விழுந்தன. இதனால் மின் வினியோக பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மின்வாரிய அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று மின் தடை செய்து மரக்கிளைகளை அகற்றி தடையற்ற மின் விநியோகம் வழங்க ஏற்பாடு செய்தனர்.

News April 17, 2024

எரியில் மண் எடுப்பதை தடுக்க வேண்டும்

image

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த காட்டூர் ஏரியில் மணல் கோரை விடப்படுவதாகவும் அதற்குரிய பணிகள் நடைபெற்று வரும் நிலையில் திருவள்ளூர் வி சி க முன்னாள் மாவட்ட தலைவர் கோபி நயினார் தலைமையில் பொன்னேரி சாராட்சியர் அலுவலகத்தில் காட்டூர் ஏரியில் குடிநீர் மற்றும் விவசாயத்தை பாதுகாத்திட ஏரியில் மண் எடுப்பதை தடுக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது.

News April 17, 2024

அரசு மருத்துவமனையில் மக்கள் பாதிப்பு

image

நீலகிரி குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் ENT (காது தொண்டை மூக்கு) மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். நோயாளிகள் பாதிக்கப்படாமல் இருக்க மருத்துவரை பணியமர்த்த வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

error: Content is protected !!