India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு முழுவதும் வரும் 19ம் தேதி மக்களவை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகளின்படி 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் இறுதி தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளியிட முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
உதகை அருகே கல்லட்டி மலை பாதையில் இன்று (17 தேதி) கார் ஒன்று வேகம் கட்டுபாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அந்த காரில் நான்கு பேர் பயணித்த நிலையில் இரண்டு பேர் சிறு காயங்களுடன் உதகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உதகை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவர்கள் கேரளாவில் இருந்து உதகைக்கு சுற்றுலா வந்தவர்கள் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வேலூரில் இன்று மாலை 6 மணிக்கு மேல் வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்யக்கூடாது. வெளி மாவட்டங்களை சார்ந்த நபர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் . மேலும் இன்று (ஏப்ரல் 17) மாலை 6 மணி முதல் (ஏப்ரல் 19) மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சுப்புலெட்சுமி இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள சப்படி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகன விபத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூரூ கோரமங்கலம் பகுதியை சேர்ந்த வாலிபர் இன்று (ஏப்ரல் 17) சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 7 மணி வரை) கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மகாவீர் ஜெயந்தி தினம் மற்றும் மே தினத்தினை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுபானக்கூடங்கள், எப்எல் 2, எப்எல்3 உரிமங்கள் உள்ள ஓட்டல்களில் செயல்பட்டு வரும் மதுபானக்கூடங்கள் ஆகியவை 2 நாட்கள் மூடப்படும். இந்த தினங்களில் விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட தொழிலாளர் நலத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “ மக்களவை தேர்தல் அன்று தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதனை கண்காணிக்க தொழிலாளர் துறையால் மாவட்ட பொறுப்பு அதிகாரி காயத்ரி தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு நிறுவனங்களை தீவிரமாக கண்காணிக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே மேற்கு காவல் நிலைய போலீசார் நேற்று மாலை ரவுண்டு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது அந்தப் பகுதியில் பாக்கியராஜ் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து லாட்டரி சீட்டு மற்றும் பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் பாக்யராஜ் என்பவரை கைது செய்தனர்.
மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று (ஏப்ரல் 17) மாலை 6 மணியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் பிரம்மாண்ட ரோடு ஷோ இன்று சேலத்தில் நடைபெறவுள்ளது. பிற்பகல் 3 மணிக்கு சேலம் அஸ்தம்பட்டியில் இருந்து டவுன் பகுதி வரை ரோடு ஷோ நடைபெறவுள்ளது.
மக்களவை பொதுத்தேர்தல் 2024ஐ முன்னிட்டு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 126ன் கீழ் இன்று(ஏப்.17) மாலை 6.00 மணி முதல், வாக்குப்பதிவு முடிவடையும் 19ம் தேதி மாலை 6.00 வரை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்குப்பதிவு முடிவடைவதற்கு 48 மணி நேரத்திற்கு முந்தைய கட்டுப்பாடுகளை கடைப்பிடித்திட வேண்டும்; இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான பூங்கொடி அறிவுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.