India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அனல் காற்று வீசுவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில், நேற்று(ஏப்.17) திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 102.2 டிகிரி பாரன்ஹீட்(39 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலை பதிவாகியுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கிப் போயினர்.
சேலம் மக்களவைத் தொகுதியில் திமுக., அதிமுக., பாமக., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 25 பேர் களத்தில் உள்ளனர். இத்தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனிடையே தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இன்னும் இன்று ஒருநாள் மட்டுமே இருப்பதால் வாக்குப்பதிவிற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சி ஹாஜரா பேகம் தெருவை சேர்ந்தவர் பாவாஷா ஜலாலுதீன் (58). கட்டிட கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று ஏனங்குடி சத்திரம் குளத்தில் ஓரமாக உள்ள கட்டையில் அமர்ந்துள்ளார். திடீரென மயக்கம் ஏற்பட்டு குளத்தின் உள் தவறி விழுந்துள்ளார். இதில் முகம் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட ஜலாலுதீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திருகண்ணபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கொட்டாம்பட்டி அருகே சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் ரபீலா பேகம்(35). இவர் சையது பானு என்பவரிடம் ரூ 20,000 கடன் வாங்கியுள்ளார். வட்டியுடன் அசலை கொடுத்த பிறகும் மேலும் பணம் கேட்டு சையது பானு நேற்று தகராறு செய்து, ரபீலா பேகத்தின் சேலையை நடு ரோட்டில் இழுத்து மானபங்கம் படுத்தியுள்ளார். இதுகுறித்த புகாரில் கொட்டாம்பட்டி போலீசார் சையது பானு, ஆயிஷா பீவி யாஸ்மின் உட்பட 4 பேரை கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக் கல்லூரியில் 2021-22ஆம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற 18 பாடப் பிரிவுகளை சார்ந்த 773 இளங்கலை, 178 முதுகலை மாணவர்கள் என 951 பேருக்கு பட்டம் வழங்கும் நிகழ்வு கல்லூரி அரங்கில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராமலக்ஷ்மி தலைமை தாங்கினார். பேராசிரியர் சனல் வரவேற்றார். நிகழ்வில் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், பெற்றோர் என பலர் கலந்துகொண்டனர்.
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் சீதாலட்சுமண அனுமன் கோதண்ட ராமசாமி கோவிலில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இவ்விழாவில் சீதா லட்சுமணன் அனுமன் சமேத ராமர் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். பின்னர் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஹே ராம் ஸ்ரீராம் என கோஷம் எழுப்பியவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மதனபுரம் பகுதியை சேர்ந்த கருப்புசாமி என்ற கூலி தொழிலாளியின் மகள் ஓவியா. இவர் சிவில் சர்வீஸ் பதவிகளுக்கான தேர்வில் தேசிய அளவில் 796 ஆவது இடம் பிடித்துள்ளார். மூன்று முறை தேர்வு எழுதிய நிலையில் 4 ஆவது முறையாக தற்போது எழுதிய தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். பெற்றோர்கள், உறவினர்கள் பலர் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
வருகின்ற 19தேதி அரக்கோணம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு மேல் அரசியல் கட்சியினரோ, வேட்பாளரோ தேர்தல் பிரச்சாரம் ஒலிபெருக்கியின் வாயிலாகவோ, நேரடியாகவோ மற்றும் சமூக ஊடகங்களின் வாயிலாகவே மேற்கொண்டாலோ அல்லது பதிவு செய்தாலோ காவல்துறை மூலம் தேர்தல் நடத்தை விதி மீறியதாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட SP கிரண்ஸ்ருதி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்.19ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையடுத்து வாக்காளர்களுக்கு கொடுக்க பணம், பரிசு பொருள் கொண்டு செல்வதை தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் வரும் வாகனங்களில் தீவிர சோதனை நடத்தி வருகினர்.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நாகப்பன்(37) என்பவரை தாம்பரம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று(ஏப்.16) குற்றவாளி நாகப்பனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்புளித்தது.
Sorry, no posts matched your criteria.