India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1.இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2) கல்வி தகுதி: 12th, B.Sc, டிப்ளமோ முடித்திருந்தால் போதும். 3) மாத சம்பளம் ரூ.25,000 முதல் 1,05,000 வரை வழங்கப்படும். 4) விருப்பமுள்ளவர்கள் <

கோவை செம்மொழிப் பூங்காவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கூட்டம் என்பதால் வழக்கத்தை விட அதிகமாக கூட்டம் காணப்பட்டது. பூங்காவில் உள்ள பார்க்கிங் முழுவதும் நிரம்பி வாகனங்களுக்கு இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பூங்காவின் அருகில் மேம்பாலம் பகுதியில் தற்காலிகமாக வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்கப்பட்ட பல கார்கள் மேம்பாலம் மீது வரிசையாக நிறுத்தப்பட்டது.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெறும். அதன்படி இன்று நடைப்பெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முதியோர் உதவி தொகை, இலவச வீட்டுமனை பட்டா, மாற்றுதிறனாளி உதவிதொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 310 மனுக்கள் பெறப்பட்டது.

தென் கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உள்ளது. இதன் காரணமாக இன்று திங்கட்கிழமை முதல், வரும் 10ஆம் தேதி வரையிலான 6 நாட்களில் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, தென்மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.

தாயுமானவர் திட்டம் அரியலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், அரியலூர் மாவட்டத்தில் உள்ள 481 ரேஷன் கடைகளை சேர்ந்த 23,288 குடும்ப அட்டைதாரர்களுக்கு, இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த திட்டம் மூலம், குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் ரேஷன் பொருட்களை பெறுவதற்கு ரேஷன் கடைகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கருவறைக்குள் நுழைந்து பாலை எடுத்து உடம்பில் ஊற்றிக் கொண்டு கடவுள் இல்லை என்று கூச்சலிட்ட அரியலூரை சேர்ந்த மணிகண்டன்(35) என்பவரை கைது செய்து விசாரித்ததில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. அவரை உறவினரிடம் ஒப்படைத்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் பரவி வருவதாகவும் எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 5 பொருட்கள் அடங்கிய தொகுப்பை, திலாஸ்பேட்டையில் உள்ள நியாவிலைக்கடையில் முதலமைச்சர் ரங்கசாமி பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், துறையின் அமைச்சர் திருமுருகன், அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருவாரூர் மாவட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகங்களில் ஆதார் மையங்களில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு ஆதார் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி திருவாரூரில் ஜன.11 அன்றும், கூத்தாநல்லூரில் ஜன.18 அன்றும், நீடாமங்கலத்தில் ஜன.25 அன்றும் நடைபெற உள்ளது. ஆதார் அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல் திருத்தம் செய்து பொதுமக்கள் பள்ளி குழந்தைகள் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் விநியோகம் செய்யும் பணி துவங்கியது. முதற்கட்டமாக 36 பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு 5039 சைக்கிள்கள் வந்தன. இதில் 4923 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு விட்டன. மீதமுள்ள மாணவர்களுக்கு சில தினங்களில் விநியோகம் செய்யப்பட்டு விடும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு காவல்துறை மக்களுக்கு ஒரு அறிவிப்பு ஒன்று இன்று (ஜனவரி-05) வெளியிட்டுள்ளது. நான் வெளியில் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது நான் தலைக்கவசம் அணிவது எவ்வளவு முக்கியமோ அதே போன்று தலைக்கவசம் அணிவதை அடுத்த தலைமுறைக்கும் கற்றுக்கொடுத்தால் பாதுகாப்பான வருங்கால சமுதாயத்தை உருவாக்கலாம். செங்கல்பட்டு காவல்துறை மக்களுக்கு அறிவுரை.
Sorry, no posts matched your criteria.