Tamilnadu

News April 18, 2024

நாகர்கோவில்: நிர்வாக குழு உறுப்பினர் பொறுப்பேற்பு

image

நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. இந்த தேர்தலில் தக்கலை பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ஜெஃபினோ நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாக குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு நேற்று(ஏப்.17) பொறுப்பேற்று கொண்டார். இவர் தக்கலை வடக்கு வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வருகிறார். காங்கிரசார் இவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

News April 18, 2024

சென்னை: கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர்

image

தமிழ்நாட்டில் நேற்று(ஏப்.17) மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், திடீரென முதல்வர் ஸ்டாலின் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு சென்றார். சில மணி நேரத்திற்கு கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின், “ஆளாக்கிய தலைவரின் நினைவிடத்தில்..” என தனது ‘X’ தளத்தில் பதிவிட்டார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

News April 18, 2024

வேலூர்: சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

image

பேரணாம்பட்டு கோட்டை காலனியை சேர்ந்தவர் சரண்ராஜ் (35). இவர் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருகிறார். இது தொடர்பாக சரண்ராஜ் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி மணிவண்ணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் நேற்று (ஏப்ரல் 17) கலெக்டர் சுப்புலட்சுமி சரண்ராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

News April 18, 2024

பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட ராமர் படம் பறிமுதல்

image

கோவையில் ரேஸ்கோா்ஸ் பகுதியில் ராமா் படத்துடன் தாமரை சின்னத்தை அச்சடித்து பொது மக்களுக்கு விநியோகம் செய்து கொண்டிருப்பதாக நேற்று பறக்கும் படையினருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து விரைந்து சென்ற பறக்கும் படையினர் பாஜகவினரிடமிருந்து தாமரை சின்னம் பொறிக்கப்பட்ட ராமா் படங்களை பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தனர். இதுதொடா்பாக ரேஸ்கோா்ஸ் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News April 18, 2024

ராமநாதபுரம்: 40 மதுபாட்டில்கள் பறிமுதல்

image

ராமநாதபுரம் கேணிக்கரை சப் இன்ஸ்பெக்டர் சபிதா ஸ்ரீ தலைமையிலான போலீசார் பேராவூர் பகுதியில் ரோந்து சென்றபோது அப்பகுதியில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த கவரங்குளம் கொத்தன் மகன் கந்தசாமி (47), என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 40 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 18, 2024

சென்னை: சிறப்பு ரயில்கள் இயக்கம்!

image

தமிழ்நாடு முழுவதும் நாளை(ஏப்.19) மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி சென்னை சென்ட்ரல் – பெங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஏப்.18ம் தேதி அதிகாலை 5.35 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு பெங்களூருவுக்கும், பெங்களூருவின் ஒயிட்பீல்டு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் சென்ட்ரலுக்கு இரவு 7 மணிக்கு வந்தடையும் என தெற்கே ரயில்வே தெரிவித்துள்ளது.

News April 18, 2024

கிருஷ்ணகிரி: சூதாடிய 3 பேர் கைது

image

கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி போலீஸ் எஸ்ஐ சிவக்குமார் மற்றும் போலீசார் சிங்கிரிப்பள்ளி பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அங்கு சூதாடிக் கொண்டிருந்தவர்களைச் சுற்றி வளைத்து விசாரித்தனர். அவர்கள் பெருமாள் (40), நாகராஜ் (35), சண்முகம் எனத் தெரிந்தது. அவர்களை கைதுசெய்து பணம் மற்றும் 3 டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.

News April 18, 2024

தேர்தல்: நெல்லை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

நெல்லை மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், நெல்லை கலெக்டருமான கார்த்திகேயன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தேர்தல் நாளான நாளை வாக்குச்சாவடிகளுக்கு 200 கிலோமீட்டர் தொலைவுக்கு பிறகு தேர்தல் ஆணைய விதிகளுக்குட்பட்டு சிறு குடில்கள் அமைக்க முன் அனுமதி பெற வேண்டும். குற்றப் பின்னணி உள்ள நபர்கள் பூத் ஏஜெண்டாக நியமிக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

News April 18, 2024

அங்காளம்மன் கோவிலில் தேர்தல் விழிப்புணர்வு

image

உளுந்தூர்பேட்டை அங்காளம்மன் திருக்கோவிலில் நூறு சதவீத வாக்களிப்பின் அவசியம் குறித்தும் தேர்தல் நாளை நினைவூட்டும் வகையிலும் விளக்குகளால் தேர்தல் தேதி குறிப்பிடப்பட்டு ஏற்றப்பட்டது. குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணி அலுவலர் தலைமையில் குழந்தை வளர்ச்சி பணியாளர்கள் மூலம் இந்த நிகழ்ச்சி நேற்று மாலை 5.30 மணி அளவில் நடைபெற்றது.

News April 18, 2024

புதுகை:ஒரே நாளில் ரூ.3 கோடி வரைக்கும் மதுபானங்கள் விற்பனை

image

நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்றுமுதல் தொடர்ந்து 3 நாட்கள் புதுக்கோட்டை மாவட்டத்திலும் 129 டாஸ்மாக் கடைகள் விடுமுறை விடப்பட்டு மேலும் டாஸ்மாக் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.இதேபோல ஓட்டல் பார்களும் இயங்கவில்லை. இந்த நிலையில தொடர் விடுமுறையின் காரணமாக மதுப்பிரியர்கள் பலர் தங்களுக்கு தேவையான மதுபானங்களை மொத்தமாக வாங்கி சென்றனர். நேற்று ஒரே நாளில் ரூ.3 கோடி வரைக்கும் மதுபானங்கள் விற்பனையானது.

error: Content is protected !!