India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை பாராளுமன்ற தொகுதியில் நாளை 1,810 ஓட்டு சாவடிகளில் ஓட்டு பதிவு நடக்கிறது. இதற்காக தேவையான பொருட்களை கொண்டு செல்லும் வழியில் அந்தந்த சட்டசபை தொகுதி தலைமை அலுவலங்களில் வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் மூலம் ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், அடிப்படை பொருட்கள் அனைத்தும் இன்று (ஏப்.18) காலை முதல் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகின்றன.
தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில், நேற்று(ஏப்.17) மட்டும் 14 மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்துள்ளது. இதன்படி மாநிலத்திலேயே அதிகபட்சமாக கரூரில் 106.7 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்தாலும், பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்தே காணப்படுவதால் பொதுமக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.
நாளை தமிழகம் முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், நாளை ஆதார் அட்டையுடன் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளை கட்டணமின்றி அழைத்துச் செல்ல அரசு டவுன் பஸ் ஊழியர்களுக்கு கோவை மண்டல அரசு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவன்று வேட்பாளர் மற்றும் அவர்களது ஏஜென்ட்கள் எப்படி நடந்து கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், “செல்போன்கள் பயன்படுத்த தடை. ஓட்டுச்சாவடியில் இருந்து 200 மீட்டருக்கு அப்பால் தான் தற்காலிக தேர்தல் அலுவலகம் அமைக்க வேண்டும். அங்கு 1 மேஜை, 2 நாற்காலி மட்டுமே பயன்படுத்த வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டது.
சங்கராபுரம் அடுத்த கீழப்பட்டு பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குப்பாச்சாரி(66) ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர். இவர் நேற்று அதிகாலை குடும்பத்துடன் சின்னசேலம் அருகே உள்ள கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு சென்றார். இந்நிலையில் காலை 9:00 மணி அளவில் இரு வாலிபர்கள் பீரோவில் வைத்திருந்த 10 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிசென்றனர். இதுகுறித்த புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதுச்சேரியில் மின்துறை இயக்குதல் பராமரிப்பு கண்காணிப்புப் பொறியாளர் ராஜேஷ்சன்யால் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தல் பணிகளால் இன்று மற்றும் நாளை மின்துறையில் உள்ள அனைத்து கணினி வசூல் மையங்களும் இயங்காது. எனவே, மின்நுகர்வோர்கள் தங்களது மின்கட்டணத்தை சம்பந்தப்பட்ட மின்துறை இணையத்தில் செலுத்தும்படி” தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழக்காவலாக்குடியைச் சேர்ந்தவர் அருண்குமார்(26), கூலி தொழிலாளி. நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் தேவூர் கடைத்தெருவுக்கு சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது தேவூர் பெட்ரோல் பங்க் அருகே வரும்போது கீழத்தெருவை சேர்ந்த மூவேந்தன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த அருண்குமார் சம்பவ இடத்திலே பலியானார்.
தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்ற நிலையில் நாளை அனைத்து ஓட்டு சாவடிகளிலும் ஓட்டுப்பதிவு நடக்கிறது. வரும் ஜூன் மாதம் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. பாளை அரசு இன்ஜினியரிங் கல்லூரி ஓட்டு எண்ணிக்கை மையத்தில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நெல்லை, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் அறை வசதி குறித்து இன்று (ஏப்.18) அறிவிக்கப்பட்டுள்ளது.
புகழ் பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு ஶ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவத்தின் நேற்று நான்காவது நாள் இரவு திருவிழாவில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாருக்கு சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனைகள் நடைபெற்று. பின் சுவாமி மீது பொம்மை பூ கொட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மக்களவைத் தேர்தல் நாளை 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், 60 வயதுக்கு மேற்பட்டோர் (ம) மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் ஆகிய மண்டலங்களில் அரசு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் மேற்கொள்ளலாம் என கோவை போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை காண்பித்து செல்லலாம்.
Sorry, no posts matched your criteria.