Tamilnadu

News March 24, 2024

பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ராமதாஸ்

image

திண்டிவனம் அடுத்த கோவடி கிராமத்தில், விழுப்புரம் மக்களவை தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து நடைபெற்ற பொது கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசு பேசினார். இந்த நிகழ்வில் பாமக சட்டமன்ற உறுப்பினர்கள், விழுப்புரம் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

News March 24, 2024

விசிக பொதுச்செயலாளருக்கு அமைச்சர் ஆதரவு

image

விழுப்புரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமாரை ஆதரித்து, வானூர் திருமண மண்டபத்தில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். 

News March 24, 2024

பயிற்சி வகுப்பினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

image

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அமைந்துள்ள வேளாங்கண்ணி மாதா மேல்நிலைப் பள்ளியில் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி வாக்கு பதிவு மையங்களில் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்று வருவதை இன்று 24.03.2024 தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டார்.

News March 24, 2024

மன்னார்குடியில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு

image

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி முகாம் இன்று மன்னார்குடி இராஜகோபால சுவாமி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. பயிற்சியில் வீடியோ மூலம் வாக்குபதிவு அலுவலர் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ பயிற்சியை பார்வையிட்டார். கோட்டாட்சியர் கீர்த்தனா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News March 24, 2024

தேனி: மின் உற்பத்தி அதிகரிப்பு

image

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து குறைந்த அளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால் கடந்த 17-ம் தேதி பெரியாறு மின் நிலையத்தில் மின் உற்பத்தி மின் உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று (மார்.23) முதல் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்ததன் காரணமாக மீண்டும் பெரியாறு மின் நிலையத்தில் 66 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி துவங்கியது.

News March 24, 2024

சிவகங்கை காங்கிரஸ் கமிட்டி சார்பில் அழைப்பு

image

சிவகங்கை நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் 25.03.2024 திங்கள் அன்று காலை 12 மணியளவில் சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதால் சிவகங்கை நாடாளுமன்ற இந்தியா கூட்டணி கட்சியின் மாவட்ட, ஒன்றிய,நகர, நிர்வாகிகள் கலந்து கொள்ளுமாறு சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அழைப்பு விடுத்தனர்.

News March 24, 2024

ஓபிஎஸ் நாளை வேட்பு மனு தாக்கல்

image

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு பாஜக வுடன் கூட்டணி வைத்துள்ளது. இந்நிலையில் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தனி சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் நாளை நண்பகல் 12 மணி அளவில் தனது ஆதரவாளர்கள், கூட்டணி கட்சியனருடன் சென்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் விஷ்ணு சந்திரனிடம் தனு வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.

News March 24, 2024

மாமல்லபுரம்: அலுவலர்களுக்கு பயிற்சி

image

மாமல்லபுரம் அருகே பையனூரில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இன்று (மார்ச்-24) நடைபெற்ற பயிற்சி முகாமில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், தேர்தல் மற்றும் வாக்களிப்பதின் அவசியம் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு செய்தனர்.

News March 24, 2024

காரைக்காலில் ரஜினியின் இளைய மகள் சாமி தரிசனம்

image

காரைக்கால் மாவட்டத்தில் மாதா கோவில் வீதி உள்ள ஸ்ரீ சௌந்தரவல்லி சமேத ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் இன்று பிரபல நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகளும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான சௌந்தர்யா ரஜினிகாந்த் ஸ்ரீ சௌந்தரவல்லி சமேத ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

News March 24, 2024

ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

image

மதுரையில் இருந்து 24.03.2024 (இன்று) 23.35 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் எண். 12687 மதுரை – சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரயில், 52 மணி நேரம் தாமதமாக இயக்கப்படுவதால், 25.03.2024 (நாளை) மதுரையில் இருந்து மதியம் 02.30 மணிக்கு புறப்படும் என தென்னக ரயில்வே மதுரை கோட்டம் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பயணிகள் இதை முன்வைத்து பயணங்களை திட்டமிட அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!