India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவை தேர்தலை முன்னிட்டு 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள், 40 சதவீதத்திற்கும் மேல் பாதிப்புடைய மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கு பதிவு செய்வதை தவிர்க்கும் விதமாக தபால் வாக்கு அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ள முதியோர், மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்.5) துவங்குகிறது.
விழுப்புரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று (ஏப்ரல்.5)மாலை முதல்வர் ஸ்டாலின் விழுப்புரத்திற்கு வருகிறார். கூட்டம் முடிந்ததும் அவர், காரில் கடலூர் வந்து சி.கே.பள்ளியில் இரவில் தங்குகிறார். தொடர்ந்து நாளை(ஏப்ரல்.6) கடலூர் சில்வர் பீச் மற்றும் அண்ணா விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் ரோடு ஷோ சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.
சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் தபால் மூலம் ஓட்டுப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்த மாற்றுத்திறனாளிகள் 1559 பேரும் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 1816 பேரும் பொது தேர்தலில் தபால் வாக்கு அளிக்க விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த வாக்காளர்களின் வீடுகளுக்கு வரும் 5, 6 மற்றும் 8 ஆகிய நாட்களில் சென்று தபால் ஓட்டுகளை பெறுவதற்கு 40
குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று(ஏப்.5) மற்றும் நாளை பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இதற்கான அறிவிப்பை சாத்தான்குளம் பார் கவுன்சில் சங்க தலைவர் ஜெகன் ஆண்டனி வெளியிட்டுள்ளார்.
திருவாரூர்: மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் உத்தரவின்படி திருவாரூர் மற்றும் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பதற்றமான வாக்கு சாவடி என கண்டறியப்பட்ட வலங்கைமான் பகுதியில் நேற்று கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில் திருவாரூர் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் பி. மணிகண்டன், நன்னிலம் உட்கோட்ட கண்காணிப்பாளர் சரவணகுமார் தலைமையில் போலீசார் மற்றும் மத்திய அதிரடி படை வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து புதுச்சேரியில் பிரசாரம் மேற்கொள்வதற்காக வருகின்ற 7ஆம் தேதி அன்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் அஞ்சல் வாக்குகளை பெறும் முகவர்களுக்கான சிறப்பு பயிற்சி நேற்று வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் உதவி அலுவலர் தீபச்சித்ரா தலைமையில் வட்டாட்சியர் முருகன், துணை வட்டாட்சியர் மற்றும் அலுவலர்கள்,முகவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாகையில் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஒரிசா மாநிலத்திலிருந்து துப்பாக்கி ஏந்திய போலீசார் சுமார் 50க்கும் மேற்பட்டோர் நாகையில் முகாமிட்டுள்ளனர். நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு நேற்று உரிய ஆலோசனைகளை வழங்கினார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள அன்னை பாத்திமா கல்லூரியில் பயிலும் புவனா என்ற மாணவி ஏப்ரல் 6 ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெற உள்ள விமான பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த சிறப்பு பயிற்சிக்கு தேர்வாகியுள்ள கல்லூரி மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடத்தி சக மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக அலுவலக கூட்டரங்கில் நேற்று மாவட்ட செயலாளர் உதயசூரியன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில்,
வருகின்ற 9 ஆம் தேதி முக வேட்பாளர் மலையரசனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Sorry, no posts matched your criteria.