India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட அசூர கிராமத்தில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் பொதுமக்களிடையே நேற்று(ஏப்.4) விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மகளிர் சுய உதவி குழுவினர் சார்பில் நேற்று மாலை 5 மணி அளவில் விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வார இறுதி நாள்களில் வெளியூர் செல்லும் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளதால், சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், விருத்தாசலம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக கூடுதலாக 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என நேற்று (ஏப்.4) தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மத்தூரில் தீவிர வாகன சோதனையை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எம்.சரயு நேற்று (ஏப்ரல் 4) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி உதவி தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ரமேஷ்குமார் உடனிருந்தனர்.
நீலகிரி ஊட்டி தேர்தல் பிரச்சாரத்துக்கு (ஏப். 4) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்றார். குன்னூர் அருகே காட்டேரியில் இவரது வாகனத்தை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். சோதனையில் ஒன்றும் கிடைக்காததால் அவரது வாகனம் செல்ல அனுமதிக்கப்பட்டது. சோதனையின்போது கட்சி பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.
மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் பாதுகாப்புடன் வாக்களிப்பதை உறுதிப்படுதுதம் நோக்கில், அரூர் அடுத்த கம்பைநல்லூர் பகுதியில் நேற்று(ஏப்.4) போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. அரூர் டிஎஸ்பி ஜெகன்நாதன் தலைமையில், கம்பைநல்லூர் போலீஸ் ஸ்டேஷன் முன் துவங்கிய அணிவகுப்பு பஸ் ஸ்டாண்ட், காரிமங்கலம் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்றது.
தஞ்சை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று(ஏப்.4) பிரசாரம் செய்தார். இதற்காக திமுக சார்பில் வரவேற்க அண்ணாசாலை, பனகல் கட்டடம் சாலையில் திமுக கொடி, தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தது. இதற்கு உரிய அனுமதி பெறாமல், தேர்தல் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருந்ததால் திமுக மற்றும் கூட்டணி கட்சி கொடிகளை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் தொடர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி நேற்று(ஏப்.4) தோவாளை அருகே பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, தோவாளையை சேர்ந்த அஜய்காந்த் என்பவரின் காரை சோதனை செய்ததில் ரூ.14 லட்சம் இருந்தது தெரிந்து, உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் இன்று(ஏப்.5) அதிகாலை 5.30 மணி அளவில், ஊட்டி போன்று இதமான குளிர் மற்றும் மூடுபனி அதிகளவில் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், சாலை சரியாக தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி பொறுமையாக சென்றனர். வெயில் வாட்டி வதைக்கும் இந்நேரத்தில், இந்த பனிமூட்டம் அளிக்கும் குளிர்ச்சியால் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பெருந்துறை சட்டமன்றத் தொகுதி, பெருந்துறை டவுன் பகுதியில் வாக்காளர்கள் அனைவரும் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் பெருந்துறை போலீசாரின் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. பெருந்துறை போலீஸ் ஸ்டேஷனில் தொடங்கிய பேரணியை பெருந்துறை டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். பெருந்துறை நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்த இந்த ஊர்வலம் அண்ணா சிலை பகுதியில் நிறைவு பெற்றது.
லோயர் கேம்ப் அரசு பள்ளியில் தன்னார்வலர்கள் பசுமை வனம் அமைக்க அனுமதி பெற்று மரம் நடவு செய்தனர். அதே வளாகத்தில் உள்ள தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து லோயர் கேம்ப் காவல் நிலையத்தில் தன்னார்வலர்கள் மீது பொய் புகார் அளித்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க இந்து எழுச்சி முன்னணி சார்பாக இராமமூர்த்தி, கோம்பை இளம்பரிதி ஆகியோர் தலைமையில் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
Sorry, no posts matched your criteria.