Tamilnadu

News March 27, 2024

காஞ்சிபுரம்: திமுக ஆலோசனை கூட்டம்

image

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தீவர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக சார்பில் காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தேரடி பகுதியில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து பூத் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் உத்திரமேரூர் எம்.எல்.ஏ சுந்தர் தலைமையில் நடைபெற்றது.

News March 27, 2024

கடனை திருப்பி கேட்டவர் மீது தாக்குதல்

image

தூத்துக்குடி முள்ளக்காடு நேசமணி நகரை சேர்ந்தவர் அருள்ராஜ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சக்தி முருகன் என்பவருக்கு பணம் கடனாக கொடுத்துள்ளார். இந்த பணத்தை நேற்று அருள்ராஜ் திரும்பி கேட்ட பொழுது அவரை சக்தி முருகன் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் சேர்ந்து தாக்கியுள்ளனர். இது பற்றி முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தினர்

News March 27, 2024

மயிலாடுதுறையில் சுதா ராமகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்

image

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இதுவரை 405 வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.மற்றொரு பக்கம் கூட்டணி கட்சித் தலைவர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.மயிலாடுதுறை தொகுதிக்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து சுதா ராமகிருஷ்ணன் கலெக்டர் அலுவலகத்தில் இன்று(மார்ச்.27) வேட்புமனு தாக்கல் செய்தார்.

News March 27, 2024

குடவாசல்: தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் விடுவிப்பு

image

குடவாசல் ஒன்றியத்தில் உள்ள 92 நடுநிலை/தொடக்கப் பள்ளிகள் உள்ளன. பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமிக்கப்பட்டு 26 பேர் தற்காலிக ஆசிரியர்கள் மாதம் 12000 ரூபாய் மதிப்பூதியத்தில் பணிபுரிகின்றனர். இவர்களுக்கான மதிப்பூதியம் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக குடவாசல் வட்டாரக் கல்வி அலுவலர்கள் குமரேசன் மற்றும் ஜெயலட்சுமி ஆகியோர் தெரிவித்தனர்.

News March 27, 2024

திருச்சியில் மதிமுக வேட்பாளர் துரைவைகோ பேட்டி.!

image

திருச்சியில் இன்று செய்தியாளர்களுக்கு மதிமுக வேட்பாளர் துரைவைகோ பேட்டி அளித்தார்: அதில், தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் கொடுக்க மறுத்தாலும், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வரும்போது, அவர்கள் பம்பரம் சின்னம் ஒதுக்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. பாஜகவை எதிர்க்கும் இயக்கங்களை முடக்கவே , இதுபோன்று வருமான வரித்துறை, அமலாக்கத்துறை  தேர்தல் ஆணையத்தை பாஜக அரசு பயன்படுத்துகிறது என்றார்.

News March 27, 2024

தேனி: ஆர்வம் காட்டும் சுயேட்சை வேட்பாளர்கள்

image

தேனி மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளர்கள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஆர்.வி.ஷஜீவனாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். சுயேட்சை வேட்பாளர்களாக அறிவரசு பாண்டியன், ரேவதி, நிஷாந்த், தியாகராஜன், அஜித்குமார், பிரகாஷ், சதீஷ்குமார் உள்ளிட்டோர் சுயேட்சை வேட்பாளர்களாக இன்று தங்களது வேட்பு மனுக்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி அவர்களிடம் தாக்கல் செய்தனர்.

News March 27, 2024

தேர்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படை வீரர்கள்.

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் நாடளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்களை ஈடுபடுத்த ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் நேற்று தெரிவித்தார் எனவே இதில் சேர விருப்பமுள்ளவர்கள் தாம்பரம் ரயில் நிலையம் எதிரே உள்ள ஜீவா வணிக வளாகத்தில் அமைந்துள்ள முன்னாள் படை வீரர் நல துணை இயக்குனர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் சென்று பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 27, 2024

மனிதநேயத்திற்கான அமைதி கட்சி வேட்பு மனு தாக்கல்

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்.27) பல்வேறு அரசியல் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் தேனி பாராளுமன்ற தொகுதியில் மனிதநேயத்திற்கான அமைதி கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் சர்ச்சில் துரை தனது வேட்பு மனுவினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கினார்.

News March 27, 2024

ராம்நாடு: ஓபிஎஸ்ஸுக்கு வந்த அடுத்த சிக்கல்

image

ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இவரின் பெயர் ஒற்றுமையைப் பயன்படுத்தி நேற்று 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று பரமக்குடி தாலுகா கங்கைகொண்டான் மலையாண்டி மகன் பன்னீர்செல்வம் (75) என்பவர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். ஆக மொத்தம் ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் மொத்தம் 6 பேர் களத்தில் உள்ளனர்.

News March 27, 2024

கோவை திமுக வேட்பாளர் வேட்பு மனு

image

கோவை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரனும், பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலையும், திமுக சார்பில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமாரும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கலெக்டர் கிராந்தி குமார் பாடியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர் டிஆர்பி ராஜா, எம்பி நடராஜன், மாநகர் மா.செயலாளர் கார்த்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்

error: Content is protected !!