India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டம் தெற்கு ஆத்தூர் பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவர் நேற்று அவரது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரின் பக்கத்து வீட்டு மூதாட்டி ஐயங்கனி (60) என்பவர் சண்டையை தடுக்க முயன்றபோது அவர் தாக்கப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோமாசிபாடி தூய புதுமைப்பதக்க அன்னை ஆலயத்தில் கிறிஸ்தவர்களின் புனித வாரம் நிகழ்வான புனித வியாழனான நேற்று இயேசுவின் பாதம் கழுவும் சடங்கு அருட்பணி ஜான் பீட்டர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். புனித வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் இறுதி உணவு நிகழ்வை நினைவு கூறும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தேர்தல் நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்கள், பேரூராட்சி மன்ற தலைவர் துணைத் தலைவர் வார்டு கவுன்சிலர்கள், ஆலோசனைக் கூட்டமானது கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான உதயசூரியன் தலைமையில், வடக்கனந்தல் பேரூர் பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி தேர்தல் பறக்கும் படை அதிகாரி குணசேகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரோஜா மற்றும் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்ததில் ரூ. 3 லட்சத்து 45ஆயிரம் இருந்தது. அந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்ப்பட்ட தெற்கு மூன்றாம் வீதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணிகளை நேற்று காலை புதுக்கோட்டை மாநகராட்சி துணை மேயர் லியாகத் அலி ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் பொதுமக்கள், மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் உடன் இருந்தனர்.
நாகூர் பெருமாள் கீழவீதி கட்சி அலுவலகத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர திமுக செயலாளர் எம்.ஆர்.செந்தில்குமார் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராசு வெற்றிக்கு தீவிரமாக பாடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமகிரிப்பேட்டை, மூலக்காடு பகுதியில் அமைந்துள்ள இவென் மோர் புட்ஸில் சிறுதானியங்களை பதப்படுத்தி பல்வேறு விதமான மதிப்பு கூட்டு பொருட்களாக வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு உற்பத்தி செய்வது மற்றும் பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். இங்கு பிஜிபி வேளாண்மை அறிவியல் கல்லூரி கிராமப்புற அனுபவ பயிற்சி மாணவிகளுக்கு உரிமையாளர் ஜனகன் செயல் விளக்கம் அளித்தார்.
கொடைக்கானல் தேவாலயங்களில் பாதம் கழுவும் திருச்சடங்கு நேற்று மாலை நடைபெற்றது. கொடைக்கானல் மூஞ்சிக்கல் திரு இருதய ஆண்டவா் ஆலயத்தில் மறைவட்டார அதிபா் சிலுவை மைக்கேல்ராஜ் தலைமையிலும், செண்பகனூா் புனித சவேரியாா் ஆலயத்தில் பங்குத் தந்தை அப்போலின் கிளாட்ராஜ் தலைமையிலும் பாதம் கழுவும் திருச்சடங்கு சிறப்புத் திருப்பலியுடன் நடைபெற்றது.
தமிழகத்தில் மக்களவை பொதுத்தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தென்சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளராக தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட உள்ளார். இந்நிலையில் நேற்று(மார்ச் 28) அவர் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, மேற்கு ஜோன்ஸ் சாலை மற்றும் நியூ காலனி ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.
சிவகங்கை மாவட்டம் பாராளுமன்ற பொதுத்தேர்தல்- 2024ஐ முன்னிட்டு, பொது தேர்தல் பார்வையாளர் ஹரிஷ், தேர்தல் செலவின பார்வையாளர் மனோஜ்குமார் வி.திரிபாதி,I.R.S., மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் ஆகியோர் தேர்தல் தொடர்பாக உரிய பணிகளை மேற்கொள்ளுவதற்கு ஏதுவாக நியமிக்கப்பட்டுள்ள நியமன அலுவலர்களுடன் இன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலந்தாய்வு கூட்டம் மேற்கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.