India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாளை நடைபெறவுள்ள சேலம் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்காக கமல்ஹாசன் இன்று சேலம் விமான நிலையம் வந்தடைந்தார். இன்று ஈரோட்டிலும் நாளை சேலத்திலும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள உள்ளார். அதைத்தொடர்ந்து இன்று சேலத்திற்கு வருகை தந்த கமல்ஹாசனுக்கு மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அருப்புக்கோட்டை அருகே குறிஞ்சாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர்(45). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவருக்கு குடும்பத்தாருக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தாலுகா போலீசார் நேற்று மூன்று பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார். இவர் தமிழக முழுவதும் இந்த கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த வரிசையில் தென்காசி மக்களவைத் தொகுதியில் வருகின்ற 2ம் தேதி பிரச்சாரம் செய்வார் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அன்றைய தினம் அவர் விருதுநகரில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
ஆண்டிப்பட்டி அருகே கொண்டம்ம நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த மச்சக்காளை – சத்தியா தம்பதி. இந்நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட மச்சக்காளை நேற்று மாலை வீட்டில் இருந்த அருவாமனையால் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். அப்போது சத்யாவின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் கோயில் திருவிழாக்களுக்கு தேர்தல் பிரிவு அலுவலகத்தில் அனுமதி பெற்று நடத்திட தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில்களின் திருவிழா உள்ளிட்ட 80 மத வழிபாட்டு தலங்களில் விழாக்கள் நடத்திட அனுமதி வேண்டி விண்ணப்பிக்கப்பட்டதில் 80 மத வழிபாட்டு தலங்களிலும் விழாக்கள் நடத்திட அனுமதி வழங்கப்பட்டது.
2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதியை முன்னிட்டு சமூக வலைதளங்களை பொறுப்பாக பயன்படுத்தி சரியான தகவல்களை பொது மக்களுக்கு வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் வதந்தி மற்றும் தவறான தகவல்களை பதிவிடுவோர் மற்றும் அவற்றை பகிர்வோர் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுத்து வழக்கு பதிவு செய்யப்படும் என நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ் கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி ரயில்வே ஜங்ஷன் கோட்ட மேலாளர் அலுவலகம் மக்களுக்கு இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் ரயில் நிலையங்களில் அல்லது ரயிலில் பயணிக்கும் போது பயணிகளுக்கு உண்டாகும் பாதுகாப்பு குறைபாடு, ரயில் நிலையத்தின் மீது புகார் அளிக்க, மருத்துவ உதவி தேவைக்கும், ரயில் தாமதம் குறித்து ரயில் மீது கம்ப்ளைன்ட் என அனைத்து பிரச்சனைகளுக்கும் 139 எண்ணை அழைத்து தீர்வு பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
கடலூர் கம்மியம்பேட்டை பழைய குப்பை கிடங்கு அருகே உள்ள கெடிலம் ஆற்றில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் இன்று அழுகிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கள்ளக்குறிச்சியில் இன்று காலை சண்முகா அரங்கில் தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக வேட்பாளர் குமரகுரு, தேமுதிகவினரிடம் வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினார். மேலும் தேமுதிக கூட்டணி கட்சியினர் தன்னை ஆதரித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
குமரி மாவட்டம் வெள்ளமடம் அருகே லாயம் சந்திப்பில் இன்று கனிம வளங்களை ஏற்றி வந்த டாரஸ் லாரி சாலை ஓரத்தில் நின்ற டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது மோதி அருகாமையில் இருந்த வீட்டின் மதில் சுவரை இடித்து நின்றது. இந்த விபத்தில் கார், டிராக்டர், மோட்டார் சைக்கிள் முழுவதும் சேதமடைந்தது. அதிஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.
Sorry, no posts matched your criteria.