India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வளநாடு அடுத்த கலிங்கபட்டியைச் சேர்ந்தவர் ஆண்டியப்பன் (80). இவர் கிழக்குக்காடு பிரிவு ரோடு அருகே சாலையோரத்தில் நேற்று மதியம் மாடு மேய்த்தபோது, அதே ஊரைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் ஓட்டி வந்த சரக்கு வாகனம் முதியவர் மீது மோதியது. இதில் ஆண்டியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வளநாடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பவானிசாகர் புங்கார்காலனி பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் தனியார் பேப்பர் மில்லில் வேலை புரிந்து வருகிறார். இவர் பணி முடித்து தனது வீட்டிற்கு நடந்து கொண்டிருக்கும் பொழுது பின்னால் வந்த பேருந்து அதிவேகமாக மோதியதில் தூக்கி வீசப்பட்ட சிவலிங்கத்தை அக்கம்பக்கத்தினர் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே உயிரிழந்தார்.

திருத்தணி ரயில் நிலையத்தில் பழைய பட்டுப்புடவை வியாபாரியான ஜமால் என்பவரை கடந்த 30ஆம் தேதி வாலிபர் ஒருவர் தாக்கினார். இது தொடர்பாக அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் . இந்நிலையில் இன்று ஜனவரி 6ஆம் தேதி திருத்தணி செந்தமிழ் நகரை சேர்ந்த மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் படுக இன மக்கள் ஹெத்தையம்மனை குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இதனையொட்டி, ஆண்டுதோறும் கோத்தகிரி அருகே பேரகணியில் உள்ள ஹெத்தை அம்மன் கோயிலில் திருவிழா நடத்தபட்டு வருவது வழக்கம். இத்திருவிழாவின்போது மாவட்டம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான படுகர் இன மக்கள் அங்கு சென்று ஹெத்தை அம்மனை வழிபடுவர். இத்திருவிழாவையொட்டி இன்று (ஜன.7) உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் திருமுக்கூடல் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். கேபிள் ஆபரேட்டர் தொழில் செய்யும் இவருக்கு மனைவி & 2 பிள்ளைகள் உள்ளனர். கார்த்திகேயன் காவணிபாக்கத்திலிருந்து திருமுக்கூடல் செல்லும் போது சாலவாக்கம் கூட்டோடு அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லோடு டாரஸ் லாரி மீது அதிகவேகமாக மோதியுள்ளார். இதில் தூக்கி வீசப்பட்ட அவரை மீது மருத்துமனையில் அனுமதித்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் அம்பலூர் அடுத்த நெக்குந்தி சுங்க சாவடி அருகே உள்ள சென்னை – பெங்களூர், தேசிய நெடுஞ்சாலையோரம், அருகே நேற்று (06.01.2026) அதே பகுதியை சேர்ந்த மூதாட்டியை சிலர் அடித்து கொலை செய்துள்ளனர். மூதாட்டியின் உடலை மீட்டு கொலைச்சம்பவம் குறித்து அம்பலூர் காவல்துறையினர் விசாரணை மேற்ககொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று வெடிகுண்டு வைத்துள்ளதாக வந்த மெயிலில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் நீதிமன்றத்தில் உடனடியாக அனைவரையும் வெளியேற்றி நீதிமன்ற மூலம் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனையில் எவ்வித தடயமும் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மெயில் மூலம் மிரட்டல் விடுத்த மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சேலம் எருமாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருள்( 40). இவரது 17 வயது மகன், படிப்பில் கவனம் செலுத்தாமல் அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனைத் தந்தை கண்டித்ததால் மனமுடைந்த மாணவன், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து கிச்சிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மகனின் இந்த விபரீத முடிவு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2026 ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கையர் விருதை தமிழக முதலமைச்சர் வழங்க உள்ளார் விருது பெரும் சாதனைகளுக்கு ரூ.1 லட்சம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் அரசு உதவி பெறாமல் வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்டவர்கள் சிறந்த சேவை புரிதல் உள்ளிட்ட தகுதி உடைய நபர்கள் விண்ணப்பங்களை பிப்.18ஆம் தேதிக்குள் உரிய விவரங்களுடன் awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கையர் விருதை தமிழக முதலமைச்சர் வழங்க உள்ளார் விருது பெரும் சாதனைகளுக்கு ரூ.1 லட்சம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் அரசு உதவி பெறாமல் வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்டவர்கள் சிறந்த சேவை புரிதல் உள்ளிட்ட தகுதி உடைய நபர்கள் விண்ணப்பங்களை பிப்.18ஆம் தேதிக்குள் உரிய விவரங்களுடன் awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.