Tamilnadu

News March 31, 2024

குமரி: பாஜக செயல்வீரர்கள் கூட்டம்

image

தேசிய ஜனநாயக கூட்டணி கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியின் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டமானது மருங்கூர் V.S.N மஹாலில் நேற்று இரவு நடைப்பெற்றது. கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வானதி ஸ்ரீனிவாசன் எம் எல் ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பாஜக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

News March 31, 2024

பாஜக நிர்வாகிக்கு நடைவண்டி சின்னம்!

image

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட கட்சி வாய்ப்பு அளிக்காததால் பாஜகவின் மதுரை மேற்கு மாவட்ட விவசாய அணி மாவட்ட செயற்குழு உறுப்பினரான வேதா என்பவர் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இவரது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெயசீலன் நடைவண்டி சின்னம் ஒதுக்கீடு செய்தார்.

News March 31, 2024

மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேருக்கு போலீசார் வேலை

image

குடியாத்தம் அலங்காநல்லூர் பாலாற்றில் மணல் கடத்துவதாக குடியாத்தம் தாலுகா போலீசாருக்கு நேற்று (மார்ச் 30) ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். இதையடுத்து போலீசார் 2 மாட்டு வண்டிகளை மணலுடன் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

News March 31, 2024

சென்னையில் வாக்குச்சாவடி அமைக்கும் பணி தீவிரம்

image

சென்னையின் 3 நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிப்பதற்காக, தேவையான அனைத்து சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளோம், என்று சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது

News March 31, 2024

கோயிலில் மலைபோல் குவிந்த விறகுகள்

image

அந்தியூரில் மிகவும் பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா ஏப்.3ஆம் தேதி நடைபெறுகிறது. அதில் குண்டம் இறங்குவதற்கு பக்தர்கள் தினம் தோறும் விறகுகளை காணிக்கையாக வழங்கி வருகின்றனர். அவை கோவில் முன்பு மலை போல் குவிக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கொண்டு 60 அடி நீளத்திற்கு குண்டம் தயார் செய்யப்படும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்குவர் .

News March 31, 2024

தர்மபுரி அருகே குடியிருப்பில் புகுந்த சாரை பாம்பு!!

image

தர்மபுரி வட்டம், குமாரசாமி பேட்டை அடுத்த வேப்பமரத்து கொட்டாய் ,பகுதியில் உள்ள பெருமாள் என்பவரின் வீட்டில் நேற்று சுமார் 4 அடி நீளமுள்ள சாரை பாம்பு ஒன்று புகுந்ததாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் (போ)
பா.வெங்கடேசன்  தலைமையிலான குழு பாம்பு பிடிக்கும் கருவிக்கொண்டு உயிருடன் பிடித்து வனத்துறையுடன் ஒப்படைத்தனர்.

News March 31, 2024

கரூர்: தண்ணீர் வாளியில் சிறுமி உயிரிழப்பு

image

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா தரகம்பட்டியைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி மாரியம்மாள். இவரின் ஒன்றரை வயது மகள் ஹரிமித்ரா வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீர் உள்ள வாளியில் தலைக்குப்புற கிடந்துள்ளார். உடனடியாக மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்த போது, பரிசோதித்த மருத்துவர் இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

News March 31, 2024

புதுச்சேரியில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

image

புதுச்சேரியில் அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கைகட்டி நின்று வேடிக்கை பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுவையில் எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியவில்லை. மக்களுக்கு வாக்குறுதி கொடுத்து ஆட்சி அமைத்தாலும் ஆளுநர் அனுமதி கொடுத்தால்தான் எதையும் செயல்படுத்த முடிகின்றது என்று தெரிவித்தார்.

News March 31, 2024

விடுதலைப் போராட்ட வீரருக்கு அஇஅதிமுக மரியாதை

image

விடுதலைப் போராட்ட வீரர் இராமநாதபுரம் மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் 264வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் MA.முனியசாமி தலைமையில் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பா.ஜெயப் பெருமாள் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News March 31, 2024

சென்னையில் இன்று காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

image

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, தலைமையில் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில், இன்று பிற்பகல் 3 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

error: Content is protected !!