Tamilnadu

News April 10, 2024

புதுவை ஜிப்மர் நிர்வாகம் அறிவிப்பு..

image

ரமலான் பண்டிகையையொட்டி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை (ஏப்ரல்.11) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு நாளை இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட உள்புற நோயாளிகள் பிரிவுகள் வழக்கம்போல் இயங்கும் என்று புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

News April 10, 2024

ஈரோடு: 2 இடங்களில் அதிரடி நடவடிக்கை

image

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொளப்பலூர் சோதனை சாவடி பகுதிகளில் நிலையான கண்காணிப்பு குழுவினர் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.80,000, பாரியூர் தொட்டிபாளையம் பிரிவு அருகில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.57,000 பறக்கும் படை குழுவினரால் கைப்பற்றப்பட்டது.

News April 10, 2024

செங்கல்பட்டு: 4 வீடுகளில் கொள்ளை முயற்சி

image

செங்கல்பட்டு அருகே ஊராட்சிமன்ற அலுவலகத்தை சுற்றியுள்ள ரமேஷ் (45), நவின் (25), சாந்திமணி(39), பரசுராமன் (42) ஆகியோரது வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். பொதுமக்களின் சத்தத்தை கேட்டு தப்பியோடினர். அதேபோன்று சிங்கப்பெருமாள் கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 10, 2024

மதுரை: விபத்து பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

image

விருதுநகர் – திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் சிவரக்கோட்டை அருகே இன்று முன்னால் சென்ற பைக் மீது கார் மோதி சாலை ஓரத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் கொய்யாப்பழ வியாபாரி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், சிகிச்சையில் இருந்த ஓட்டுநர் மணியின் மகள் சிவஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

News April 10, 2024

கோவையில்: டாஸ்மாக் கடைகளுக்கு லீவ்

image

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கோவையில் எதிர்வரும் ஏப்ரல்.17ஆம் காலை 10.00 மணி முதல் ஏப்ரல்.19ஆம் தேதி இரவு 12 மணி வரை மற்றும் ஜூன்.04 வாக்கு எண்ணிக்கை நாளன்றும் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதை மீறி செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

News April 10, 2024

தேனி அருகே விபத்து

image

ஆண்டிபட்டி  அருகே உள்ள எஸ்எஸ் புரம் பகுதியில் கேரளாவில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. இதில், காரில் பயணித்த தம்பதி மற்றும்  குழந்தை படுகாயமின்றி உயிர் பிழைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிபட்டி போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.  

News April 10, 2024

திண்டுக்கல்: திலகபாமா அமைச்சர் ஆவது உறுதி

image

பாமக வேட்பாளர் திலகபாமாவிற்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அர்ஜுன் சம்பத்,  “தேர்தலில் வெற்றி பெற்றால் திலகபாமா நிச்சயம் மத்திய அமைச்சர் ஆவது உறுதி; இதனால் அவரை தோற்கடித்தே தீர வேண்டும் எனக் திமுகவும் அதிமுகவும் திட்டமிட்டு வருகிறது” என தெரிவித்தார். 

News April 10, 2024

தஞ்சாவூர் மாவட்டத்தில் மழை

image

தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும். இதன் காரணமாக நாளை 11.04.2024 தென் தமிழகம், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 10, 2024

விருதுநகர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வரும் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் அனைத்து தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என அறிவித்துள்ள மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், மீறி வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News April 10, 2024

திருச்சி: வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

image

பொன்மலைப்பட்டி,தெற்கு உக்கடை விறகு கடை தெருவை சேர்ந்த மாரியப்பன்(37), கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி, மகன் உள்ளனர். கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து மாரியப்பன் நேற்று காலை தேஜஸ் ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!