India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் சங்கிலிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம். தனது குடும்பத்துடன் திருப்பதி கோயிலுக்கு சென்று விட்டு இன்று ரயில் மூலம் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஷேர் ஆட்டோ மூலம் திருப்பத்தூர் நோக்கி சென்றபோது ஷேர் ஆட்டோ நிலை தடுமாறி சாலையோரம் கவிழ்ந்ததில் ஆட்டோவில் பயணம் செய்த 3 பேர் படுகாயமடைந்தனர்.
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பாக நாடாளுமன்ற தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது இந்நிலையில் சிவகாசி ஊராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் உள்ள மேல்நிலைக் குடிநீர் தொட்டிகளில் “என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற வாசகத்தை அனைவரும் அறியும் வகையில் சுவர் விளம்பரம் வரைந்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலுார், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய, 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன.ராசிபுரத்தில், 2,105 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள், 1,982 பேர், என, மொத்தம், 4,087 பேர் உள்ளனர். அதில், 977 பேருக்கு, வீட்டில் இருந்தபடியே தபால் மூலம் ஓட்டு போடும் வகையில், ’12டி’ படிவம் வழங்கப்பட்டுள்ளது என தேர்தல் அலுவலர் உமா தெரிவித்துள்ளார்.
சினிமா பிரபலமும், அதிமுக பிரமுகருமான நடிகை விந்தியா திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணியை ஆதரித்து பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளார். ஏப்ரல் 2ம் தேதி திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளதாக அதிமுக தேர்தல் பணிக்குழு தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள 5 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வரும் ஏப்ரல் மாதம் நவீன லேப்ராஸ்கோபி மூலம் குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 15 ஆம் தேதி காடையாம்பட்டி, இளம்பிள்ளையில் 23ஆம் தேதி, கருமந்துறையில் 24ஆம் தேதி, மகுடஞ்சாவடியில் 25ஆம் தேதி, நங்கவள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30ஆம் தேதி குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது.
நாமக்கலில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில், பங்குனி மாதம் மூன்றாம் சனிக்கிழமை யொட்டி இன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்பு மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக, திமுக, பாமக, நாம் தமிழர் ,பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயேட்சை என மொத்தம் 26 பேர் இறுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர் .வேட்பு மனு வாபஸ் தொடர்பான கடைசி நாளான இன்று மூன்று பேர் மட்டுமே மனுக்களை வாபஸ் பெற்று கொண்டனர். இதைத் தொடர்ந்து 26 பேர் இறுதி வேட்பாளராக உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் வளர்மதி தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்க பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அவ்வகையில், மதுரை நாம் தமிழர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் முனைவர் மோ. சத்யாதேவியை ஆதரித்து நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரையில் பரப்புரை மேற்கொள்கிறார்.
மேலக்கடையநல்லூரை சேர்ந்த மாரியப்பன் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் வீட்டில் தண்ணீர் பிடிக்க சென்றபோது, தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த லட்சுமணன் மாரியப்பனை நேற்று கத்தியால் குத்தியதில் மாரியப்பன் மயங்கி கீழே விழுந்துள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனை செல்லும் வழியில் மாரியப்பன் உயிரிழந்துள்ளார்.இதுகுறித்த புகாரில் போலீசார் லட்சுமணனை கைது செய்தனர்.
திமுக கூட்டணியில், சிதம்பரம், விழுப்புரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. விசிக சார்பில் விழுப்புரத்தில் ரவிக்குமாரும், சிதம்பரத்தில் திருமாவளவனும் வேட்பாளர்களாக களம் காணுகின்றனர். சின்னம் உறுதியாவதற்கு முன்பே பானை சின்னம் வைத்து திருமாவளவன் வாக்கு சேகரிப்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.