India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிவகங்கை மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <

1.மாவட்ட ஆட்சியர் – பிரவீன் குமார் – 0452-2531110
2.போலீஸ் கமிஷனர் – லோகநாதன் – 0452-2350777
3.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – அரவிந்த் – 0452-2539466
4.மாநகராட்சி கமிஷனர் – சித்ரா விஜயன் – 0452 2321121
5.மாவட்ட வருவாய் அலுவலர் – அன்பழகன் – 0452-2532106
இந்த நல்ல தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்யுங்க கண்டிப்பாக ஒருவருக்காவது உதவும்.

திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்று (ஜன.7) 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவசர காலத்தில் பொதுமக்களுக்கு முதலுதவி அளிப்பது மற்றும் அதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தினமொரு விழிப்புணர்வு செய்தி வெளியிட்டு வருகிறது. இன்றைய (ஜன.7) செய்தியில் மொபைல் போன்களில் முன்பின் தெரியாத நபர்களிடமிருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம். அதன் மூலம் உங்களை மிரட்டி பணம் பறிக்கும் வாய்ப்புகள் உள்ளது, எனவே மக்கள் எச்சரிக்கையுடனும் இருக்கவும். இதுகுறித்த அவசர உதவிக்கு: 1930-ஐ அழைக்கவும் என்று அறிவிவுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் காரை பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த இளையராஜா (20). இவர் வெளிநாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தற்கொலை செய்து கொண்டார். மேலும் காதல் தோல்வியா என்ற கோணத்தில் பாடாலூர் போலீசார் விசாரனை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

சென்னையில் புத்தகக் கண்காட்சி நாளை தொடங்கவுள்ளது. இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம் வெளியிடப்படவுள்ளது. இந்த வழக்கை விசாரித்த HC, அந்த புத்தகங்களை விற்பனை செய்யாதவாறு உடனடியாக தடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிபதியை கொச்சைப்படுத்தும் விதமான புத்தகம் எந்த நிலையிலும் வெளியாக கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 120 அடி உயரத்தில் இருந்து மின் பேருந்து உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். அதில், 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் மனு நாளில், காவல் கண்காணிப்பாளர் கே. எஸ்.பாலகிருஷ்ணன் பொதுமக்களை நேரில் சந்தித்து 7 மனுக்களை பெற்றார். பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும், மனுக்களை விரைந்து முடிக்க காவல் நிலைய பொறுப்பு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியை முடித்து விட்டு மதுரை திரும்பியபோது, திருமங்கலம் அருகே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்ற காரின் டயர் வெடித்தது. திருமங்கலம் அருகே நடைபெற்ற இந்த விபத்தல் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் சின்னம் சென்னைக்கு 1270 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது 24 மணிநேரத்தில் மேலும் வலுவடையும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை எண்ணுாரில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.