Tamilnadu

News March 30, 2024

வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டது

image

கோவையில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு மறுபரிசீலனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (மார்ச்.30) கட்சி வேட்பாளர்களுக்கான சின்னங்களும் சுயேட்சை வேட்பாளர்களுக்கான சின்னங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு தாமரை, அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு இரட்டை இலை, திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு உதயசூரியன் சின்னங்கள் வழங்கப்பட்டுள்ளன.

News March 30, 2024

மக்களுடன் செல்பி எடுத்த ஆட்சியர்

image

கோவை புரூக் பீல்டு வர்த்தக வளாகத்தில் இன்று (மார்ச்.30) மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக 100% வாக்குப்பதிவினை வலியுறுத்தி மகளிர்கள் 100க்கும் மேற்பட்ட கோலம் வரையப்பட்டுள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான கிராந்திகுமார் பாடி பார்வையிட்டு மகளிர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

News March 30, 2024

தேனியில் 25 பேர் போட்டி

image

தேனி மக்களவை தொகுதியில் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிந்து, இன்று வேட்பு மனுக்களை வாபஸ் வாங்க கடைசி நாளாகும். அதன்படி இன்று சுயேச்சை வேட்பாளர்கள் நான்கு பேர் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். மீதமுள்ள 25 பேர் தேனி தொகுதியில் போட்டியிடுவதாக ஆட்சியர் தெரிவித்தார்.

News March 30, 2024

வேட்பாளர் பட்டியலில் யாருக்கு எந்த இடம்?

image

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இறுதி 23 வேட்பாளர்கள் பெயர் அவர்களுக்கு வழங்கப்பட்ட சின்ன மற்றும் அவரது புகைப்படத்துடன் கூடிய பட்டியலை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் இன்று (மார்ச் 30 வெளியிட்டார். இதில் பாஜக முதல் இடத்திலும் பகுஜன் சமாஜ் கட்சி 2வது இடத்திலும் காங்கிரஸ் மூன்றாவது இடத்திலும் அதிமுக 4வது இடத்திலும் உள்ளது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பெயர் 7வது இடத்தில் உள்ளது.

News March 30, 2024

கோவை: எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

image

வானதி சீனிவாசன் இன்று (மார்ச்.30) வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசை விமர்சித்து, முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டால் அவர்களை கைது செய்ய குஜராத் வரை விமானத்தில் தமிழக காவல்துறை செல்கிறது. நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்கிறது. இப்படி காவல்துறையை, தங்களது ஏவல் துறையாக முதலமைச்சர் பயன்படுத்தி வருவது வேடிக்கையாக இருக்கிறது என்றார்.

News March 30, 2024

கோவர்தன கிரி வாகனத்தில் கோபாலன்

image

மன்னார்குடி ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோயில் பங்குனி திருவிழா 27 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்றைய நான்காம் நாள் இரவு நிகழ்வாக ஸ்ரீ ராஜகோபாலன் மாடு மேய்க்கும் கண்ணன் அலங்காரத்தில் கோவர்தன கிரி வாகனத்தில் எழுந்தருளினார். வாகன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு பந்தலடி மேலராஜவீதி வழியாக நான்கு திரு வீதிகள் சுற்றி கோவிலை சென்றடைந்தார்.

News March 30, 2024

ஆரணி: வேட்பாளருக்கு அமைச்சர் தீவிர வாக்கு சேகரிப்பு

image

செஞ்சி, மேல்மலையனூர் ஒன்றியம், கப்ளாம்பாடி மற்றும் தாழங்குணம் ஆகிய ஊராட்சிகளில் இந்திய கூட்டணி சார்பில் ஆரணி மக்களவைத் தொகுதி வேட்பாளர் M.S.தரணிவேந்தனை ஆதரித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் உதயசூரியன் சின்னத்திற்கு இன்று வாக்குகள் சேகரித்தார்.
இதில் இந்தியா கூட்டணியின் நிர்வாகிகள் மற்றும் கழக மாவட்ட, ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்குகள் சேகரித்தனர்.

News March 30, 2024

வேலூர் : ஏரியில் மூழ்கி 4 பெண்கள் பலி

image

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வேப்பூர் ஏரியில் குளித்து கொண்டிருந்த 4 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். குடியாத்தம் தங்கம் நகரை சேர்ந்த  சரோஜா, அவரது மகள் லலிதா, சகோதரிகள் காஜியா , ப்ரீத்தி ஆகிய 4 பேர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து குடியாத்தம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 30, 2024

சிவகங்கை: cVIGIL இணையதளத்தில் புகார்கள் தெரிவிக்கலாம்

image

சிவகங்கை மக்களவைத் தொகுதிகளுக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும், 6 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே c VIGIL என்ற இணையதள வாயிலாக தேர்தல் தொடர்பான புகார், தகவல் தெரிவிப்பதன் அடிப்படையில் ,  குறிப்பிட்ட இடத்திற்கு பறக்கும் படை அலுவலர்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

News March 30, 2024

புதுவை: இறுதி வேட்பாளர் பட்டியல்

image

வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு புதுச்சேரி தொகுதியில் போட்டியிட வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், பாஜக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட 7 கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் 19 சுயேட்சைகள் என 26 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக வேட்பாளர் பட்டியலை புதுச்சேரி தேர்தல் நடந்தும் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான குலோத்துங்கன் இன்று அறிவித்துள்ளார்.

error: Content is protected !!