India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த மொத்தம் 37 பேரில் 6 பேர் தங்கள் வேட்புமனுவை திரும்ப பெற்றனர். பின் 31 நபர்கள் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியில் வெளியிடப்பட்டது. இதில் 31 வேட்பாளர்கள் மற்றும் நோட்டாவிற்கு (1) என 32 சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அதிகாரியும் ஆட்சியருமான ராஜ கோபால் சுங்கரா தெரிவித்துள்ளர்.
விழுப்புரம் (தனி) மக்களவைத் தொகுதிக்கான வேட்பாளா் இறுதிப் பட்டியல் சனிக்கிழமை நேற்று (மார்ச் 30) மாலை வெளியிடப்பட்டது. அதன்படி விழுப்புரம் (தனி) மக்களவைத் தொகுதியில் விசிக, அதிமுக, பாமக, நாதக, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 17 பேர் போட்டியிடுகின்றனர் என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பழனி தெரிவித்தார்.
மக்களவை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி வேலூரில் நாளை (திங்கட்கிழமை) பள்ளிகொண்டா கந்தனேரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் பசுபதிக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். இதையொட்டி பிரமாண்ட மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சுப்பிரமணியபுரம் முல்லை நகரை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மகன் சிவசங்கர் கூலி தொழிலாளி. கடந்த சில தினமாக வயிற்று வலியால் அவதிப்பட்ட சிவசங்கர் நேற்று இரவு கல்லிடை அருகே காட்டுமன்னார்கோவில் ரயில்வே கேட் பகுதியில் செங்கோட்டை ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இது குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவேற்காடு அருகே அயனம்பாக்கத்தை சேர்ந்தவர் நாசர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 28-ந்தேதி இரவு பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் நாசரிடம் கத்தி முனையில் ரூ.1000-ஐ பறித்து சென்றனர். இதுகுறித்து நாசர் அளித்த புகாரின் பேரில் சத்தியமூர்த்தி, சக்தி மற்றும் கிஷோர் குமார் ஆகிய மூவரை திருவேற்காடு போலீசார் நேற்று கைது செய்தனர்.
சேவூர் அருகே பெரிய கண்ணூரில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அங்குள்ள குளத்துப் பகுதிக்குச் சென்றார். அப்போது அந்தப் பெண்ணை பின் தொடர்ந்து சென்ற அதே பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவர் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார். அப்போது பொதுமக்கள் வினோத்தை பிடித்து காவல் நிலையத்தில் நேற்று ஒப்படைத்தனர்.
தர்மபுரி மாவட்டம் அதகப்பாடி அடுத்த ஏ.செக்காரப்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன் (34), விவசாயி. இவர் நேற்று முன் தினம் இரவு டூவீலரில் கிருஷ்ணகிரி- தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் பையூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பாண்டியன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம், குன்னூர், ஓட்டுபட்டறை ஸ்டான்லி பார்க் பகுதியை சார்ந்த இரு இளைஞர்கள் கேரளாவில் உள்ள குருசுமலைக்கு சென்ற போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி இறந்துள்ளனர் இறந்த இருவரின் உடலும் பிரேத பரிசோதனை முடிந்து இன்று குன்னூர் கொண்டுவரப்பட உள்ளது. இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கூட்டணி கட்சியின் சார்பில் சுயேட்சையாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து வரும் 4-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமநாதபுரத்தில் வாகன பிரச்சாரம் செய்கிறார். ராமநாதபுரம் பழைய பஸ் நிலையம் தொடங்கி அரண்மனை வரையுள்ள இடங்களில் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து அமித்ஷா பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து நேற்று இரவு திருச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமமுக அமைப்பு செயலாளர் சாருபால தொண்டைமான், பாஜக உறுப்பினர் காளீஸ்வரன் உட்பட 700 பேர் மீது தில்லைநகர் போலீசார் இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.