India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டம் கம்பம் கௌமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 5ஆம் தேதி வரை 21 நாட்கள் வெகு விமர்சியாக நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து கம்பம் நகராட்சி ஆணையர் வாசுதேவன், தேனி மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் ஜெயபாண்டியன் ஆகியோர் விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினர்.
தேனி பெரியகுளம் அருகே உள்ள குள்ளபுரம் வேளாண் கல்லூரி பயிலும் நான்காம் ஆண்டு மாணவிகள் கிராம தங்கள் பயிற்சி ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒரு பாகமாக வாழையை தாக்கும் அஸ்வினி பூச்சிகள் விளைச்சல் குறைப்பது குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
பெரம்பலூர்: அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவ நாள் உறுதிமொழியினை கலெக்டர் க.கற்பகம் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசுத்துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல்பிரபு, மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் ந.சிவா உட்பட பலர் உடனிருந்தனர்.
திருச்சி மாநகராட்சி பஞ்சப்பூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையர் சரவணன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக ஸ்ரீரங்கம் பகுதியில் கீதாபுரம் படித்துறையில் ரிவர் பண்ட் டெவலப்மெண்ட் பணியினையும் ஆணையர் ஆய்வு செய்து பணிகளின் செயல்பாடுகள் குறித்து கேட்டு அறிந்தார்.
ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு தண்ணீர் தேடி யானைகள் அலைந்து வருகிறது. சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மதியம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை கூட்டம் உணவு தேடி சாலையில் உலா வந்தது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் போட்டியிடுகிறார். அவருக்கு தென்காசி மாவட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். கடையநல்லூர் மணிக்கூண்டு முன்பு இன்று 12ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்து பேசும்போத, இந்த தேர்தல் முக்கியமான தேர்தல் மோடியை வீட்டிற்கு அனுப்பும் தேர்தல் என்று பேசினார்.
தேனி மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை (ஏப்.12) தேனி வருகை தரவுள்ளார். தேனி வரும் அவர் பங்களாமேடு பகுதியில் தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று (12.04.2024) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, சமத்துவ நாள் உறுதிமொழி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி. க. சங்கீதா, இ.ஆ.ப., மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக மாவட்ட அளவிலான 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாபெரும் கபடி போட்டி வரும் 13ஆம் தேதி காலை 9:30 மணி முதல் நடைபெற உள்ளது. எனவே விருப்பமுள்ள வீரர் வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாஜகவிற்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “ஜிஎஸ்டி என்னும் நெருப்பின் மூலம் பட்டாசு உற்பத்தி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை சிதறடித்த பாஜகவை எங்கள் ஆதரவு உங்களுக்கு இல்லை” இப்படிக்கு ஜிஎஸ்டி நலிவடைந்த பொதுமக்கள் என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.