India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே ஏப்ரல் 17, 18, 19ம் தேதிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ம் தேதி ஆகிய 4 நாள்கள் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக்கடைகள், அதனுடன் இயங்கும் பார்கள் மூடப்படும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுங்கரா நேற்று செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது காலை 10 மணிக்குள் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக வாட்டி வந்த வெயிலால், தற்போது பெய்யும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டிவனத்தில் நேற்று (ஏப்ரல்.13) வரும் நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிக்க வேண்டி பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகித்த லயன் சங்க உறுப்பினர்கள். திண்டிவனம் உழவர் சந்தையில் பொதுமக்களிடம் “தேர்தல் தேசத்தின் பெருவிழா”என திண்டிவனம் லயன் சங்கம் மற்றும் கல்லூரி மாணவிகள் இணைந்து நடத்திய பேரணியில் நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிக்க வேண்டி பொதுமக்களிடம் நோட்டீஸ் விநியோகித்தனர்.
மக்களவைத் தேர்தல் முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்தில் 100% வாக்கினை பெறுவதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் துறை சார்பில் காரைக்கால் பேருந்து நிலையத்தில் தேர்தல் விளம்பரங்கள் அடங்கிய விளம்பரப் பலகையில் பொதுமக்கள் ஆர்வமாக செல்பி எடுத்து தங்கள் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி தொகுதி வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீ குமாருக்கு ஆதரவாக நேற்று சுரண்டையில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அப்போது, விபத்தில் பலியான திமுக பிரமுகர் கலிங்கப்பட்டி சுப்பிரமணியன் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. உடன், மாவட்ட செயலாளர் இராம உதயசூரியன், சதன் திருமலை குமார் எம்எல்ஏ, ஏடி நடராஜன், ராமகிருஷ்ணன், துரைமுருகன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் வரும் 18 மற்றும் 19 ஆகிய 2 நாட்களில் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் வெளியிட மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் முறையான முன் அனுமதி பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேற்று தகவல் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் சம்பந்தமாக விளம்பரங்கள் வெளியிட விரும்புவோர் வரும் 17ஆம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்தது. நேற்று மாலை வானம் கருமேகம் சூழ்ந்து சற்று நேரத்தில் மழை கொட்ட தொடங்கியது. கோடை நேரத்தில் பெய்த மழையால் குளிர்ந்த சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
உளுந்தூர்பேட்டை அருகே வெள்ளையூர் கிராமத்தில் இன்று உளுந்தூர்பேட்டை காவல்நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரது வீட்டில் கஞ்சா பதுக்கிவைத்து விற்பனை செய்யப்பட்டு வருவது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த சக்திவேல் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வேலூர் மாவட்டம், பிரசித்தி பெற்ற கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள ஸ்ரீ பெருமாள் சுவாமிக்கு நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஸ்ரீ பெருமாள் சுவாமிக்கு மலர் அலங்காரம் மற்றும் சிறப்பு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது.
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணிக்கு ஆதரவாக நேற்று சமூக ஆர்வலர்கள் க.முனிவேல், ஆதிமூலம், ஆகியோர் தருமபுரி நகரம் முழுவதும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அவர்கள் கூறியதாவது; 1000000 லட்சத்திற்கு மேல் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக பிரச்சாரம் செய்கிறோம் என்றனர்.
Sorry, no posts matched your criteria.