India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக காவல்துறையில் சுருக்கெழுத்து பணியகத்தில் இளநிலை நிருபர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதுகுறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இருந்தது. இதில் மொத்தம் 54 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 12 ஆம் வகுப்பு மற்றும் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும்படி கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நடுக்காவேரி யூனியன் வங்கி அருகில் பறக்கும் படை அதிகாரி பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கண்டியூர் நோக்கி வந்த டாட்டா லாரி வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது வாகனத்தை ஓட்டி வந்த நாமக்கல் பரமத்திவேலூர் தாலுகா புதுப்பாளையம், வள்ளியம்பட்டி தனராசு ஆவணங்களுமின்றி ரூ.80,000 எடுத்து வந்தார். அதை பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
சென்னையில் மருத்துவக்கல்லூரி மாணவர் ரோகன் என்பவர் மீது நேற்று இரவு துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த கஜராஜ் என்பவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார், அவரிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஈரோட்டில் இருந்து குஜராத் மாநிலம் சூரத் – புகா் இரயில் நிலையமான உத்னாவுக்கு நாளை (ஏப்.15) ஒருவழி சிறப்பு இரயில் (எண்: 06099) இயக்கப்படவுள்ளது. ஈரோட்டில் இருந்து அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் இரயில் சேலம், பங்காருப்பேட்டை,கிருஷ்ணராஜபுரம், ராய்ச்சூா், சோலாப்பூா், அஹமத்நகா், நந்தூா்பாா் வழியாக, ஏப்ரல் 16 மாலை 4.15 மணிக்கு உத்னா சென்றடையும் என தெற்கு இரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெம்பக்கோட்டை அருகே செவல்பட்டி பகுதியில் இன்று விருதுநகர் மக்களவை தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே ஆண்டில் 30 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் 10 கோடி பெண்களுக்கு மகாலட்சுமி திட்டத்தின் கீழ் தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
வடுகப்பட்டியைச் சேர்ந்தவர் வேதமூர்த்தி. இவர் அரசு கல்லூரியில் 1 ஆம் ஆண்டு படித்து வந்தார். நேற்று வழக்கம் போல் கல்லூரி செல்ல தனியார் பேருந்தில் ஏறி முன் வாசல் படிக்கட்டில் நின்று பயணம் செய்தார். சக்கம்பட்டி அருகே பேருந்து வளைவில் திரும்பும் போது கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் திருக்கோவிலில் சித்திரை மாத தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து அதிக அளவில் அண்ணாமலையார் பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். இதனால் அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ரூ.4 கோடி ஏப்.6 இல் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் சதீஷ், நவீன்,பெருமாள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக கோவர்தனுக்கு சொந்தமான உணவகத்தில் ரூ.1 கோடி கைமாற்றப்பட்டது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் பாஜக தொழிற்துறை மாநில துணைத்தலைவர் கோவர்தனன் நேரில் ஆஜராக தாம்பரம் காவல் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளது.
நெல்லையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்இடி மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. நெல்லை, பாளையங்கோட்டை, ராதாபுரம், நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது காலை 10 மணிக்குள் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக வாட்டி வந்த வெயிலால், தற்போது பெய்யும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.