Tamilnadu

News April 2, 2024

ராம்நாடு: கூட்டு பாலியல் வழக்கில் 5 பேர் ஆஜர்

image

பரமக்குடியில் 9ஆம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பரமக்குடி 3வது வார்டு கவுன்சிலர் சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர், ராஜாமுகமது, தரகர்கள் உமா, கயல்விழி ஆகியோரை கைதுசெய்து சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், ராமநாதபுரம் கூடுதல் மகளிர் கோர்ட்டில் 5 பேரும் நேற்று ஆஜரான நிலையில் வரும் 8ஆம் தேதிக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

News April 2, 2024

மீன் விற்பனை செய்து வாக்கு சேகரித்த நாம் தமிழர்

image

நாகை நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் சார்பில் போட்டியிடும் கார்த்திகா இன்று செருதூர் மீனவ கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் அங்கு மீன் விற்பனை செய்யும் பெண்களுடன் அமர்ந்து மீன் விற்பனை செய்தும், மீன்களை சுத்தம் செய்தும் வாக்கு சேகரித்தார். அவருடன் அக்கட்சியின் மண்டல செயலாளர் அகஸ்டின் அற்புதராஜ் உட்பட பலர் இருந்தனர்.

News April 2, 2024

ரூ.1.35 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் 

image

செங்கல்பட்டு அருகே பொன்விளைந்த களத்தூர் அருகே தேரடி தெருவில் வீட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக செங்கல்பட்டு கலால் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்ததில் ரகசியமாக வீட்டில் மதுபானம் விற்ற சுலோச்சனா (65) என்பவரை நேற்று (ஏப்-1) கைது செய்து அவரிடமிருந்த ரூ.1.35 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

News April 2, 2024

மயிலாடுதுறையில் நூதன முறையில் பிரச்சாரம்

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி பேரூராட்சி பகுதிகளில் நேற்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி பாமக மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது பொறையார் காய்கறி சந்தையில் வாக்கு சேகரித்த போது காய்கறி கடையில் தானே காய்கறிகள் விற்பனை செய்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

News April 2, 2024

புதுவை சிறப்பு எஸ்எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை

image

புதுவை, பாகூரைச் சேர்ந்த சரவணன்( 56). போக்குவரத்து காவல் சிறப்பு எஸ்எஸ்ஐ-ஆக பணிபுரிந்து வரும் இவர் கடந்த 5 நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் வீட்டின் தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த பாகூர் போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 2, 2024

மதுரை: பயங்கர ஆயுதங்களுடன் ரவுடிகள் கைது

image

மதுரையில் கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட திட்டமிட்டு ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 9 பேரை கீரைத்துறை போலீசார் நேற்று கைது செய்தனர். மதுரை சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த அழகு, விக்னேஸ்வரன், இளம்பரிதி, பாரத், அப்பு, காமேஷ் ஆகிய 6 பேர் கொண்ட குழுவையும், மணி, கிளி கார்த்திக், செந்தில் முருகன் ஆகிய 3 பேர் கொண்ட குழுவையும் போலீசார் கைது செய்து, அரிவாள் கத்தி, கயிறு போன்ற ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

News April 2, 2024

கள்ளக்குறிச்சி: ஏரியில் மிதந்த உடல் – போலீசார் விசாரணை

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த முறைபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவர் அதே பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க கடந்த மார்ச் 29 ஆம் தேதி சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், நேற்று அவரது உடல் ஏரியில் சடலமாக கரை ஒதுங்கியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு சென்ற சங்கராபுரம் போலீசார் உடலை கைப்பற்றி தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 2, 2024

திருப்பத்தூர் அருகே பரபரப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மூக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட தாயப்பன் வட்டம் பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கு அதே பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அக்கிராமத்தில் உள்ள பொதுமக்கள் 100 க்கும் மேற்பட்டோர் சம்பந்தப்பட்ட சாலையில் குவிந்துள்ளதால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News April 2, 2024

திறந்தவெளி சிறைச்சாலை காவலர் விபத்தில் பலி

image

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் மறவமங்கலம் அருகே திறந்தவெளி சிறைச்சாலையில் காவலராக பணிபுரிந்து வந்த அருளானந்த் என்பவர் குண்டாக்குடை அருகில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும்போது எதிரே வந்த டிப்பர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து காளையார் கோவில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 2, 2024

திருவாரூர்: வாகன தணிக்கையில் சிக்கிய 12 லட்சம்

image

திருவாரூர் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் மாவட்ட எல்லை பகுதியில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று நன்னிலம் அருகே உள்ள கீரனூர் சோதனை சாவடியில், மன்னார்குடி மேல நாகை பகுதியை சேர்ந்த தமிழ்வாணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.12,85,000 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!