Tamilnadu

News April 2, 2024

பிரதமர் மோடி ஏப்.10ல் மீண்டும் கோவை வருகை?

image

வரும் மக்களவைத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி ஏப்.,9 ஆம் தேதி பெரம்பலூர் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். அதனை தொடர்ந்து ஏப்ரல் 10ஆம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ள தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், பொள்ளாச்சி தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் பேச உள்ளதாக கோவை பாஜக நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

News April 2, 2024

விழுப்புரம்: ஏரிக்கரையில் ஆண் சடலம்

image

திண்டிவனம் அடுத்த பாதிரி ஏரிக்கரையில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கழுத்தில் காயங்களுடன் கிடப்பதாக நேற்று (ஏப்.1) ஒலக்கூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்துவருகின்றனர்.

News April 2, 2024

முதல்வர் வருகை: வேலூரில் 2500 போலீசார் குவிப்பு

image

மக்களவைத் தேர்தலில் வேலூர், அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை (ஏப்ரல் 2) வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். முதல்வர் வருகையை முன்னிட்டு 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

News April 2, 2024

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

image

கோவை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக தேர்தல் பணி மேற்கொள்வது மற்றும் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதி அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஏப்ரல் 2) நடைபெற்றது. இதில் பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கலந்துகொண்டார்.

News April 2, 2024

தி.மலை முதல் சென்னை கடற்கரை வரை நேரடி இரயில் சேவை

image

சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் வரை சென்று கொண்டிருந்த இரயில் இனி திருவண்ணாமலை வரை வந்து செல்லும் என்று திருச்சி பிரிவு தெற்கு இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மாலை 6.00 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் இரயில் இரவு 12.05 க்கு வேலூர், ஆரணி வழியாக திருவண்ணாமலை வந்து சேரும். காலை 3.45 க்கு புறப்பட்டு காலை 9.05 க்கு ஆரணி, வேலூர் வழியாக சென்னை வந்தடையும்.

News April 2, 2024

தூத்துக்குடி அருகே விபத்து: ஒருவர் பலி

image

கோவில்பட்டி விநாயகர் நகரை சேர்ந்த நில புரோக்கர் துரை. நேற்று இவர் எட்டையாபுரம் குமார கிரி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து எட்டையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 2, 2024

நாடார் சங்க நிர்வாகிகளை சந்தித்த கனிமொழி எம்பி

image

திருநெல்வேலி எம்பி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புருசை ஆதரித்து திருநெல்வேலி தட்சின மாற நாடார் சங்க நிர்வாகிகளிடம் தூத்துக்குடி எம்பி கனிமொழி இன்று (ஏப்ரல் 2) ஆதரவு கேட்டு கலந்துரையாடினார். தொடர்ந்து அவர் சங்க நிர்வாகிகள் மத்தியில் பேசும்போது, இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல், நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல், வணிகர்களை வாட்டி வதைக்கும் மத்திய அரசை அகற்றுவதற்கான தேர்தல் ஆகும் என்றார்.

News April 2, 2024

கிருஷ்ணகிரியில் விதிமீறல்: பணம் பறிமுதல்

image

ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குரங்கு கல்மேட்டில் தேர்தல் கண்காணிப்பு அலுவலர் சாந்தகுமாரி தலைமையில் தேர்தல் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது. அந்த வழியாக வந்த மினிவேனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேனில் உரிய ஆவணமின்றி ஆட்டு வியாபாரி சங்கர் என்பவர் எடுத்துச் சென்ற 1,29,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டு வட்டாட்சியரகத்தில் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

News April 2, 2024

நீலகிரி கலெக்டர் அதிரடி அறிவிப்பு

image

நீலகிரி ஆட்சியர் இன்று (ஏப்ரல் 2) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நீலகிரியில் தற்போது 57 பறக்கும் படை குழுக்கள் இயங்கி வருகின்றன. தேர்தல் பார்வையாளர் கிரண் அறிவுறுத்தலின்படி, தீவிரமாக கண்காணிக்க பறக்கும்படை குழுவின் மொத்த எண்ணிக்கை 72 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இக்குழுக்கள் 24 மணி நேரமும் செயல்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 2, 2024

போக்குவரத்துக்கு இடையூறு: 20 வாகனங்களுக்கு அபராதம்

image

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரில் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் விஜய், லூா்து பிரவீன் உள்ளிட்டோா் நேற்று(ஏப்.1) ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, தஞ்சாவூா் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட 20 இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், சாலையோர நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளின் பொருள்களும் அப்புறப்படுத்தப்பட்டன.

error: Content is protected !!